உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

265

அலுவலர்களும் எதிர்பார்க்கிறார்கள், இதற்கும் இந்த அரசு ஆவன செய்யும் என்று நம்புகிறேன்.

கழக அரசு காலத்திலே சிறப்புக்குரிய அம்சமான ஒரு திட்டத்தை நாங்கள் அறிவித்தோம், பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதியன்று காவல் துறையினருக்குப் பதக்கம் வழங்குதல் என்ற ஒரு திட்டம் ஏதோ அவர்களுக்குப் பதக்கம் வழங்குவது மாத்திரமல்ல, சிறப்புப் பரிசுகளாக பணமுடிப்புகளும் தருவது என்ற திட்டத்தையும் வைத்திருந்தோம். சிறப்புப் பணிபுரிகின்ற காவலர்க்கு பதக்கமும் வழங்கி ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. சிறப்புப் பணிபுரிகின்ற இன்ஸ்பெக்டர்களாக இருந்தால் பதக்கம் வழங்கி இரண்டாயிரம் ரூபாய் அளிப்பது, டி. எஸ். பி. யாக இருப்பார் களானால் அவர்களுக்கு சிறப்புப் பதக்கம் வழங்கி மூவாயிரம் ரூபாய் அளிப்பது, வீரச்செயல் புரிந்தோர் யாராக இருந்தாலும் அவர்கள் காவலராக இருந்தாலும்சரி, டி. எஸ். பி. யாக இருந்தாலும் சரி அவர்கள் சம நிலையில் கருதப்பட்டு அவர்கள் தங்களுடைய உயிரைத் துரும்பென மதித்து செயலிலே ஈடுபட்டார்கள் கடமையின் காரணமாக என்பதால் அவர்களுக்கு பதக்கமும் 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. எஸ். பி. என்ற அளவிலே உள்ளவர்கள் அவர்கள் கொஞ்சம் அதிக ஊதியம் பெறுகின்றவர்கள் என்ற காரணத்தால் பண முடிப்பு இல்லாமல் சிறப்புப் பதக்கம் அல்லது வீரப்பதக்கம் அவர்களுக்கு வழங்கப் பட்டது. இப்படி 1969-ஆம் ஆண்டிலிருந்து 1975-ஆம் ஆண்டு வரை 30 பேர்கள் வீரப்பதக்கங்கள் பெற்றிருக்கிறார்கள். 150 பேர்கள் சிறப்பு பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் குடியரசுத் தலைவர் ஆட்சியிலே காவலர்களுக்கு வீரப்பதக் கத்தை சிறப்புப் பதக்கத்தை அளிக்க வேண்டுமென்று அப்போதிருந்த காவல்துறைத் தலைமை அலுவலரால் எடுத்துச் சொல்லப்படாமல் இருந்திருக்கும் என்று நான் எண்ணவில்லை. ஏற்கனவே இருந்த அதிகாரியின் பெயர் 'அருள்' அதற்குப் பிறகு வந்த அதிகாரியின் பெயரிலே 'அருள்' இல்லை என்ற காரணத்தாலே அவர் சொல்லி இருக்கமாட்டார் என்று நினைக்கவில்லை, சொல்லியிருப்பார், ஆனால் அப்போது இருந்த அதிகாரிகள் என்ன கருதியிருக்கிறார்கள் என்றால்