264
காவல்துறை பற்றி
அதுமாத்திரமல்ல; அரசு அலுவலர்களுக்குத் தரப்பட்ட குடும்பப் பாதுகாப்பு நிதி - இந்நியாவிலே முதன் முதலாகத் தமிழக அரசு அறிமுகப்படுத்திய திட்டம் அரசு அலுவ லாளர்கள் பணிநேரத்தில் இறந்து விடுவார்களானால் குடும்பத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் பாதுகாப்பு நிதி தருவது என்ற வகையில் அளிக்கப்பட்டது. ஒரே ஒரு கணக்கை மாத்திரம் குறிப்பிட விரும்புகிறேன். 1974-75-ஆம் ஆண்டு - அந்த ஆண்டுக் கணக்கில் மாத்திரம் பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகை பெற்ற அரசு அலுவலாளர்கள் ஆயிரம் பேர்; ஆயிரம் பேருக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த ஆயிரம் பேரில் அந்தப் பத்தாயிரம் ரூபாய் உதவியைப் பெற்ற காவலர்கள் தொகை 208 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பே 46,000 பேர் உள்ள காவல்துறையில்
ண்டுக்கு 200, 300 பேர் பணி புரியும் காலத்திலேயே மாண்டுகொண்டுதான் இருந்தார்கள். அப்போது அவர்கள் குடும்பத்தை வாழ வைக்க எந்த வசதியும் செய்யப்படாத சூழ்நிலை இருந்தது. ஆனால் கழக அரசு காலத்தில் பத்தாயிரம் ரூபாய் அந்தக் குடும்பங்களுக்கு அவர்கள் பதைப்பை நீக்கி, அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையைப் பெறும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
போலீசாருக்கு தினப்படிகள் இன்றைக்கு இருப்பதே போதாது என்று மாண்புமிகு சுப்பு அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆளுங்கட்சியிலே சில உறுப்பினர்களும் சொல்லியிருக் கிறார்கள். ஏற்கெனவே மிகக் குறைவாக இருந்த தினப்படி கழக ஆட்சிக் காலத்திலே உயர்த்தப்பட்டது. அது மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்று அவர்கள் வைக்கிற கோரிக்கை இன்றைக்கு ஏறியிருக்கிற விலைவாசிகளைப் பொறுத்து நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய பொருத்தமான நியாயமான கோரிக்கை என்பதை இந்த அரசு உணரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அதைப் போலவே வீட்டு வாடகைப்படிகளும் கழக அரசு காலத்திலே பெரும்பாலும் நல்ல நிலையிலே உயர்த்தித் தரப்பட்டது. இப்போதும் அதற்கு ஏற்ப அந்தத் துறையின் அதிகாரிகளும்