உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

263

முறையில் காவலர்கள் கட்டலாம் என்று 5,000 சைக்கிள்களுக்குத் திட்டமிடப்பட்டு, அந்த முறை செயல்படுத்தப்பட்டு, 1975-ஆம் ஆண்டு ஆரம்பம் வரையில் 2,500 காவலர்கள் அந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்களா என்ற விவரம் என்னிடத்தில்

இல்லை.

எனவே, 742 ஆக இருந்த காவல் துறையினர் வாகனங்கள் கூட 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு 1975-ஆம் ஆண்டு வரையில் 1,648 வாகனங்களாக அவர்களுக்கு உயர்த்தப்பட்டன.

800-க்கு மேற்பட்ட காவல் நிலையங்களில் தொலைபேசிகள் இருந்தாக வேண்டும் குற்றங்களை உடனடியாக எடுத்துச் சொல்லவும், புகார்களைத் தரவும், குற்றங்கள் நிகழ்கின்ற இடத்தைக் குறிப்பிட்டுக் காட்டவும், உடனடியாகப் போலீசார் விரைந்து செல்லவும் தொலைபேசி துணை மிக மிக இன்றியமையாதது என்று எடுத்துச் சொல்லப்பட்டதைக் கவனத்தில் வைத்து 700-க்கு மேற்பட்ட காவல் நிலையங்களில் தொலைபேசி அமைத்துக் கொடுத்தோம்.

அதுமாத்திரமல்ல; பல பதவி உயர்வுகளுக்கு, மேலும் எண்ணிக்கை உயர்வின் மூலம் எங்களுக்கு விமோசனமே கிடையாதா? மேல் மட்டத்திற்கு வர இயலாதா? என்று பல அதிகாரிகள் இருந்த நிலையில் அவர்கள் மேல் மட்டத்திற்கு வருவதற்காக அந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. எஸ். பி. 1966-67-ல் 29 ஆக இருந்தது 1975-ல் 43 ஆக உயர்ந்தது; டி. எஸ். பி. 146 ஆக இருந்தது 174 ஆக உயர்ந்தது; இன்ஸ்பெக்டர் 369 ஆக இருந்தது 897 ஆக உயர்ந்தது; சப்-இன்ஸ்பெக்டர் 1,505 ஆக இருந்தது 1904 ஆக உயர்ந்தது; ஏ. எஸ். ஐ. 118 ஆக இருந்தது 527 ஆக உயர்ந்தது. காவலர் தொகை 28,891 ஆக இருந்தது 36,642 ஆகியது. ஆக, 1975-ஆம் ஆண்டிலே இந்தத் துறையிலே 45,690 பேர் இடம் பெற்றிருந்தார்கள். இப்போது ஏறத்தாழ 46,000 பேர் இடம் பெற்றிருப்பதாக முதலமைச்சர் அவர்கள் அவையில் வைத்துள்ள மானியக் கோரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.