கலைஞரின் சட்டமன்ற உரைகள்
269
ஐந்து என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 45 நாட்களை வைத்துக் கொண்டு நான் ஐந்தாறு ஆண்டுகளுக்கான கணக்கைப் போட்டு, 45 நாட்களுக்கு ஐந்து லாக்கப் மரணம், 6 ஆண்டுகளுக்கு எத்தனை லாக்கப் மரணம் என்றெல்லாம் பைத்தியக் காரத்தனமாகக் கணக்குப்போட விரும்பவில்லை.
இப்படிப்பட்ட லாக்கப் மரணங்கள் கழக ஆட்சியிலே சம்பவித்த பொழுது இவையனைத்திற்கும் நேரடிப்பொறுப்பு கருணாநிதிதான் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இன்றைக்கு அதே லாக் அப் மரணங்கள் சம்பவிக்கிற நேரத்தில், இந்த ஆட்சியைப் பிடிக்காத சில அதிகாரிகள் வேண்டுமென்றே களங்கப்படுத்த இந்தக் காரியங்களைச் செய்கிறார்கள் என்று வாதாடப்படுகிறது. அப்படிப்பட்ட, அந்த வகையான வாதம் என் சார்பிலே அந்தக் காலத்திலே எடுத்து வைக்கப்படவில்லையென்று நான் எண்ணி வேதனைப்படுகிறேன். ஆனால், அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்தவர்களிடத்தில் அப்படிப்பட்ட ஒரு வாதத்தை எதிர் பார்ப்பது அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த எனக்கு அது நியாயமும் அல்ல, சரியும் அல்ல என்று நான் உணர்கிறேன்.
மேலும் பல சம்பவங்களைக் கேள்விப்படுகிறேன். ஆயிரம் விளக்கைச் சேர்ந்த மக்கீஸ் கார்டனைச் சேர்ந்த 13 வயது சிறுமி வசந்தி காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டாள் என்ற செய்தி வந்தது.
3
புதிய ஆட்சி பதவி ஏற்பதற்கு 4 நாட்களுக்கு முன்னால் திருவைகுண்டத்தில் காவல்நிலையத்தில் ஒரு பெண்ணை போலீஸ்காரர்கள் கற்பழித்தார்கள் என்ற செய்தி வந்தது.,
திருச்சியில், முத்தப்பன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் மேரி என்பவள் தூத்துக்குடிக்கு சென்றிருந்தபொழுது மத்திய காவல் படையைச் சேர்ந்த சேகபால், தங்கராஜ் இருவராலும் அவள் கற்பழிக்கப்பட்டாள் என்ற செய்தி வந்துள்ளது. இவைகளெல்லாம் கழக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றால், இங்கே ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் திருப்பூர் மணிமாறன் பேசினாரே, அதுபோல், நாங்கள் சொல்லித்தான் நடந்திருக்கும் என்பதைப் போல், கற்பனையே