உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

281

என்று சொன்ன அதே நீதிபதிதான் இத்தீர்ப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.

எனவே, குறிப்பாக பலர் சொன்னார்கள். க்ளைவ் ஹாஸ்டல் சம்பவத்திற்கு இவர்கள்தான் காரணம், கருணாநிதிதான் காரணம். கருணாநிதிதான் காரணம் என்று சுவரொட்டிகள் போட்டு மாணவர்களை எல்லாம் கீழே படுக்க வைத்து அவர்கள்மீது நடப்பதுபோல் சொல்லி படிக்காதவர் டாக்டர் பட்டம் பெறலாமா என்று கேட்கிறார்கள். டாக்டர் பட்டம் பெறுவது என்பது படித்து படித்து பட்டம் பெற்று பெறுவதும் உண்டு. படிக்காமல் பட்டம் பெறுபவர்களும் உண்டு. இது அவை முன்னவருக்கு தெரியாத விஷயம் அல்ல. பி. எச்டி. படித்துவிட்டு பட்டம் பெறும் டாக்டர்களும் உண்டு. எம். பி. பி. எஸ். படித்து பட்டம் பெறுகிற டாக்டர்களும் உண்டு. கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதும் உண்டு. இப்படியெல்லாம் போஸ்டர்கள் போடப்பட்டன. இவைகளுக்கெல்லாம் பிறகு இன்றைக்கு ஆளும் கட்சியில் உள்ளவர்கள் 40 நாட்கள் ஆயிற்றே, 45 நாட்கள் ஆயிற்றே என்ற காரணத்தாலோ என்னவோ இன்னும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக இருப்பதுபோல் கருதிக்கொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதியாக நான் ஒன்றை மட்டும் கூறிக்கொண்டு முடித்துக் கொள்கிறேன். பூலாவாரி சுகுமாரன் வழக்கு பற்றி மிக விஸ்தாரமாக இங்கு பேசப்பட்டு வந்திருக்கிறது. முதல் அமைச்சர் அவர்கள் இங்கே இல்லாவிட்டாலும் ஒலிபெருக்கி மூலம் நிச்சயமாக கேட்டுக் கொண்டிருந்திருப்பார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். கேட்டுக்கொண்டிருப்பார்கள். அதைப் பற்றி விஸ்தாரமாகப் பேசப்பட்டிருக்கிறது. பூலாவாரி சுகுமாரன் மரணம், அதனால் ஏற்பட்ட வேதனை அனைவருடைய மனதையும் கலக்கக் கூடியதுதான். அதற்குப் பிறகு அது சம்பந்தமாக வழக்குத் தொடர எந்த முயற்சியையும் அந்த அரசு எடுக்கவில்லை என்று கூறுவதும், வழக்கை வேண்டுமென்றே விட்டுவிட்டதாக ஒரு அரசின்மீது குற்றஞ்சாட்டுவதும், யாரோ ஒரு பெரிய புள்ளி சிக்க இருந்தார், அவரை விடுவிக்க இப்படியெல்லாம் செய்யப்பட்டது என்று கூறுவதும் பொருந்தாது