உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

297

இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. நண்பர் ரகுமான்கான் அவர்கள் பேசும்போது நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் குறுக்கிட்டு, புகார் கொடுத்ததைப்பற்றி விளக்கம் சொன்னார்கள். நாங்கள் பல புகார்களைக் கொடுத்தோம். அதிலே மத்திய சர்க்கார் அல்லது சர்க்காரியா கமிஷன் அதிலே ஏற்றுக்கொள்ளக்கூடிய புகார்களை எடுத்துக்கொண்டு, மற்றவைகளை; ஆதாரமில்லாதவைகளை விட்டுவிட்டார்கள் என்று சொன்னார்கள், அவர்கள் பூர்வாங்கமாக உள்ளவைகளை எடுத்துக்கொண்டு, எஞ்சியதை விட்டுவிட்டார்கள் என்று நேற்றைய முன்தினம் இந்தத் துறைபற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது குறிப்பிட்டார்கள்; பிரைமா ஃபேஸி கேஸ் இல்லாதவற்றை விட்டுவிட்டார்கள். இருப்பவற்றை எடுத்துக்கொண்டார்கள் என்பதுதான் அதன் பொருள். நான் ஒன்றை எடுத்துக்காட்டாகச் சொல்ல விரும்புகிறேன், நம்முடைய முதல்வர் அவர்கள் அன்றையதினம் எதிர்க்கட்சியின் சார்பிலே தந்த புகாரில், திருவாரூர், தெற்கு வீதியிலே 94ம் எண் உள்ள வீடு பல லட்சக்கணக்கான ரூபாயில் கருணாநிதியால்

கட்டப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உள்ளபடியே இந்தக் குற்றச்சாட்டு பிரைமாஃபேஸி கேஸ் உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்திருப்பார்களேயானால், இங்கே அச்சடித்து கொடுக்கப்பட்ட புத்தகத்திலும் சரி, நான் அதற்கு இந்திரா காந்தி அம்மையார் அவர்களுக்கு அளித்த பதிலிலும் சரி அந்த வீட்டினுடைய புகைப்படத்தை எடுத்து அனுப்பியிருக்கிறேன். ஒரு இடிந்துபோன வீடு அது.

இந்த வீட்டை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல நண்பர்கள் பார்த்திருக்கக்கூடும். இப்போது அடித்த புயலால்கூட 3 சுவர்கள் விழுந்துவிட்டன. அந்த வீட்டைக் கட்டவேண்டு மென்று நகராட்சி ஆணையருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன், ஆனால் பல லட்ச ரூபாய் போட்டு கட்டப்பட்ட பெரிய பங்களா என்றும் போடப்பட்டிருக்கிறது. இப்படி புகைப்படம் அனுப்பிய பிறகும் கூட, பதில் உரையை இந்த மாமன்றத்திலே இணைத்த பின்னரும், அவர்கள் இதிலே பிரைமாஃபேஸி கேஸ் இருக்கிறதா என்று உள்ளபடியே பார்த்திருக்க வேண்டும். ஆனால், ஒரு 28 குற்றச்சாட்டுகளை மட்டும் எடுத்து, இதை சர்க்காரியா விசாரிப்பதற்கு