298
காவல்துறை பற்றி
ஆதாரம் இருக்கின்றது என்று சேர்த்திருக்க மாட்டார்கள். இதிலே பிரைமாஃபேஸி கேஸ் இருக்கிறதா என்று பார்த்திருந்தால் இதை இணைத்திருக்க மாட்டார்கள். காரணம், வீட்டின் புகைப்படம் இருக்கிறது இடிந்து விழுந்த வீடு. பங்களா அல்ல. பல லட்சக்கணக்கான ரூபாய்கள் போட்டு கட்டப்பட்ட வீடல்ல என்று விவரங்களையெல்லாம் பூர்வாங்க விசாரணையில், பிரைமா ஃபேஸியில் வெளியிட்டிருக்ககூடும்.
ஆனால் அவசர அவசரமாக, கழக ஆட்சி கலைக்கப்பட்ட உடன், இந்த 54 குற்றச்சாட்டுகளில் அதிகமாக கருணாநிதியைச் சார்ந்த குற்றங்களை பொறுக்கி எடுக்கச் சொல்லி, அப்படி எடுக்கப்பட்ட 28 குற்றச்சாட்டுகள் மீது விசாரணை செய்தார்கள்.
உள்ளபடியே அதிலே உள்ள மொத்தக் குற்றச்சாட்டுகள் 54 ஆகும். எனவே, நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த 28 குற்றச்சாட்டுக்களின் மீது எந்தவிதமான தீர்ப்பு வந்தாலும் சரி மீதம் இருக்கின்ற 26 குற்றச்சாட்டுகள் மீதும் அவைகளையும் விசாரிக்கின்ற வகையிலே, ஒரு விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அன்றையதினம் சொன்னீர்களாம் நாங்கள் பாரபட்சம் இல்லாமல் எந்தக் கட்சியில் இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கட்சியில் இருந்தாலும் அல்லது நடவடிக்கைக்குப் பயந்து தங்கள் கட்சிக்கு வந்தாலும் யாரையும் விடாமல் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே. மிச்சமுள்ள 26 குற்றச்சாட்டுகளுக்குத் தாங்களே ஒரு நீதி விசாரணை வைக்க வேண்டுமென்று மிகுந்த பணிவன்போடு நேச உணர்வோடு கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
28 குற்றச்சாட்டுகளைப் பற்றி விரைவில் அறிக்கை வர இருக்கிறது. அவைகளைப்பற்றி மாநில அரசோ, மத்திய சர்க்காரோ நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அவைகளை எப்படித் தாங்குவது, சந்திப்பது என்பதைப்பற்றி நாங்கள், தொடர்புடையவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவைகளைச் சமாளிக்க இருக்கிறோம். அது வேறு விவகாரம்
ஆனால் 54 குற்றச்சாட்டுகளில் 28 குற்றச்சாட்டுகள் மாத்திரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. 26 குற்றச்சாட்டுகள்