கலைஞரின் சட்டமன்ற உரைகள்
299
விடப்பட்டிருக்கின்றன. நாம் தொடர்ந்து வலியுறுத்திச் சொல்லி வருவது – முதலமைச்சர் அவர்கள் விடப்பட்ட 26 குற்றச்சாட்டுகளின் பேரிலும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இன்னொரு கமிஷன்கூடப் போடப்பட்டிருக்கிறது - கிருஷ்ணசாமி நாயுடு கமிஷன் என்று போடப்பட்டிருக்கிறது முன்பே அறிவித்தார்கள் - அதற்கேற்ப போடப்பட்டிருக்கிறது அறிவித்த நேரத்திலேயே நான் அறிக்கைகள் மூலமாகச் சொன்னேன். 1972-ல் இருந்து கணக்கெடுத்திருக்கிறீர்கள். 1969-ல் இருந்து நான் முதலமைச்சராக வந்த அந்த 1969-ல் இருந்து கணக்கெடுங்கள் என்றேன். எனக்குள்ள நிலை எல்லாம் 1972-ல் இருந்து நீங்கள் போட்ட பிறகு அதற்குப் பிறகு நீங்களே ஆட்சிக்கு வந்து அல்லது வேறு கட்சி ஆட்சிக்கு வந்து மீண்டும் 1969-ல் இருந்து 1972 வரை விசாரணை என்று சொல்லி என்னைச் சித்திரவதை செய்துகொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. 1972 முதல் 1975 வரை விசாரணை முடிந்தபிறகு காங்கிரஸ் கட்சியோ, ஜனதா கட்சியோ, கம்யூனிஸ்டு கட்சியோ ஆட்சிக்கு வந்து அப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர், 'மாண்புமிகு எம். ஜி. ஆர். அவர்கள் மூன்று வருஷத்தை விட்டுவிட்டார்கள்; ஆகவே, 1969-ல் இருந்து 1972-ம் ஆண்டு வரை விசாரணை செய்ய கமிஷன் போடுகிறோம் என்று போட ஆரம்பித்தால் விசாரணைக் கமிஷன் வேலையே சரியாக இருக்கும். அடிக்கிற அடியை ஒரே தடவையாக அடித்து முடித்துவிடுங்கள்; பல தடவையாக அடித்துக்கொண்டிருக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
1972-ல் திராவிட முன்னேற்றக் கழக அரசின்மீது சில குறைபாடுகளைச் சொல்லிவிட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டது. 1972-ல் வெளியேற வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டபோது 1969 முதல் 1972 வரை தவறுகள் நடந்தன; எனவே வெளியேறினேன்' என்றுதான் காரணம் சொன்னீர்கள், தவறுகள் நடந்தன என்று சொல்லப்பட்ட காலத்தை ஏன் விட்டுவிட்டீர்கள் என்பதுதான் என்னுடைய வாதம். எனவே, இந்த நாயுடு கமிஷனுக்கு காலத்தை விரிவாக்கி 1969-ல் இருந்து என்றைக்கு இந்தப் பாவி முதலமைச்சராக வந்து உட்கார்ந்தானோ அதிலிருந்து, நீங்கள் நிர்ணயித்திருக்கிற 1975ஆம் ஆண்டு வரை அந்தக் கமிஷன் ஆராய வேண்டுமென்று நியமிப்பதுதான் முறையானதாகவும், பொருத்தமானதாகவும், பாரபட்சமற்றதாகவும்
-