உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

-

காவல்துறை பற்றி

மாசு

விட்டுவிட்டு ஏன் வெளியூரிலிருந்து வாங்குகிறீர்கள் எனறெல்லாம் அதற்கு ஒரு மாசு வந்து சேரும் என்பதைப் போல அவர் மாசு கற்பிப்பார் என்று சொல்லமாட்டேன். (சிரிப்பு) வந்து சேரும் என்று கவலைப்பட்டுப் பேசினார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வேன். வெளிமாநிலத்தி லிருந்து மதுவகை வரவழைக்கப்படுவது என்பது இன்றைக்குத் தான் நாங்கள் அறிவித்திருக்கின்ற காரியம் அல்ல. 1983-84 ஆம் ஆண்டில் அவர் அமைச்சராக இருந்த காலத்திலேயே 4 இலட்சத்து அறுபத்து ஆறாயிரத்து 258 கேஸ்கள் வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றன.

ஐ. எம். எப். எஸ். 1984-85-இல் 5,60,605 கேஸ்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. 1985-86-இல் 51,407 கேஸ்கள் வெளி மாநிலத்திலிருந்து வரவழைக்கக்கப்பட்டிருக்கின்றன. 1986-87-இல் 1,34,795 கேஸ்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. 1987-88-இல் 1,02,310 கேஸ்கள் வெளி மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன. 1988-89-இல் 95,709 கேஸ்கள் வெளி மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன. அதைப்போலவே பீர்கூட 1983-84-இல் 5,97,000 கேஸ்கள்; 1984-85-இல் 6,46,000 கேஸ்கள், 1985-86-இல் 9,72,000 கேஸ்கள், 1986-87-இல் 14,31,000 கேஸ்கள், 1987-88-இல் 8,47,000 கேஸ்கள், 1988-89-இல் 7,18,500 கேஸ்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. அதனால், தேவைக்குத்தான் சொல்கிறோமே அல்லாமல், வரவழைத்தே தீருவது என்றல்ல. யாரோடும் பேரம் பேசிக் கொண்டல்ல, அதுவும் டெண்டர் விட்டுத்தான். அந்த டெண்டர் மூலமாகத்தான் அது வரவழைக்கப்படும். தேவைப்பட்டால்; இங்கே உள்ளவர்கள் முரண்டு பிடித்தால். அதற்குத்தானே தவிர வேறல்ல. நம்முடைய நண்பர் திரு. உகம்சந்த் அவர்களும் சொன்னார்கள், திரு. திருநாவுக்கரசு அவர்களும் சொன்னார்கள். நீங்கள் ஆயத்தீர்வையை 1972 ஆம் ஆண்டு 25 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகக் குறைக்கவில்லையா என்று. இந்த ஆயத் தீர்வையில் 2 ரகம் இருக்கிறது. ஆயத் தீர்வை என்பது தீ ரெக்டிபைட் ஸ்பிரிட் உற்பத்தி ஆகி வருகின்ற அந்த இடத்திலேயே கட்டப்படுகிற ஆயத் தீர்வை, அது 8 ரூபாய். அது 1961 ஆம் ஆண்டு முதல் இருக்கிறது. ரெக்டிபைட் ஸ்பிரிட்