உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

401

நம்முடைய தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அந்த வகையிலே, 9,000 பேர் 9 பட்டாலியனில் பல இடங்களில், நான் சொன்ன இடங்களிலெல்லாம் இன்றைக்குப் பரவிக் கிடக்கிறார்கள். அதிலே, உளுந்தூர்பேட்டையிலே ஒரு கேம்ப் அங்கே அமைக்க வேண்டுமென்ற கருத்தைக் கடந்த ஆண்டு நண்பர் தென்னரசு அவர்கள் இங்கே வெளியிட்டார்கள். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அப்பொழுது சொல்லப் பட்டது. அதற்கு நிலமாற்றம் செய்வதற்கான ஆணை ஆ 19-4-1990-இலே பிறப்பிக்கப்பட்டு, அந்தப் பணிகள் இன்றைக்கு வேகமாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. அது கேம்பாகவோ அல்லது பில்டிங்காகவோ அமைக்கப்படும். அதிலே ஒரு ஆயிரம் பேர் வரையிலே தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ்காரர்கள் உளுந்தூர்பேட்டையிலே அந்தக் கேம்பிலே தங்கிப் பணியாற்றக் கூடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையிலும், கோவையிலும், சென்னையைப்போல, கமிஷனர் அலுவலகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தேன். இப்பொழுது கமிஷனர் அலுவலகம் மதுரை, கோவை, ஆகிய இரண்டு இடங்களிலும் அமைக்கப் பட்டாகிவிட்டது. அதுமாத்திரம் அல்ல. இங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களாலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களாலும் எடுத்துக் கூறப்பட்ட இந்த 41 வது பிரிவு அகற்றப்படவேண்டும்; அந்தத் தடை இருக்கக்கூடாது என்று அவர்கள் வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்று நான் என்றைக்கும் சொல்லவில்லை. இதே வரதராசன் அவர்கள்தான் நிதிநிலை அறிக்கையிலே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மே தினப் பூங்கா வேண்டும் மே தின நினைவுச் சின்னம் வேண்டுமென்று இந்த அவையிலே பேசினார். அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னேன். ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு மாதத்திலே அந்த விழா நடைபெற்று, அது ஒருவேளை நடந்ததா நடக்கவில்லையா என்று அவருக்குத் தெரியாமல் போய்விடக் கூடாது என்று அவரையும் அழைத்து அந்த விழாவிலே பேசச் செய்திருக்

14 - க.ச.உ. (கா.து)