402
காவல்துறை பற்றி
கின்றோம். எனவே, அவர் இங்கே பேசும் பொழுதே, அதைப் பற்றி அரசு யோசிக்கும் என்று சொல்லப்பட்டது. அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி, அதற்கான ஏற்பாடு செய்யப் பட்டது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையினுடைய முடிவு சரியாக எனக்குத் தெரிவிக்கப்படாத காரணத்தினால் இவ்வளவு தயக்கங்கள் ஏற்பட்டன. இப்பொழுது தெரிவிக்கப்பட்டு, அந்த ஆணைகள், அந்தத் தடைகள் இனிமேல் இருக்காது என்றும், எப்படி சென்னையிலே இருக்காதோ அதைப்போல மதுரையிலும், கோவையிலும் இருக்காது என்பதையும் நான் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இந்தக் கருத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போலீஸ் கமிஷன், இரண்டுமுறை தமிழ்நாட்டிலே அமைக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக 71 ஆம் ஆண்டு போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. இப்பொழுது இரண்டாவது முறையாக அமைக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் கமிஷன் 71-இல் அமைக்கப்பட்ட பிறகுதான், 72 ஆம் ஆண்டு முதன் முதலாக காவல்துறையிலே உள்ளவர்களுக்கு அடிப்படைச் சம்பளம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு 80 ரூபாய் என்று இருந்ததை முதன்முதலாக 200 ரூபாய், என்று ஒரேயடியாக உயர்த்தியது திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை மறந்துவிடக் கூடாது. அந்த 200 ரூபாய்தான் இன்றைக்கு அடிப்படைச் சம்பளம் 825 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அஃதன்னியில், அவர்களுடைய படிகள்; இவைகளெல்லாம் வேறு, அடிப்படைச் சம்பளம் 80 ஆக இருந்ததை 200 ஆக உயர்த்தி இன்றைய தினம் 825 என்கின்ற அளவிற்கு இந்த அரசு அந்தப் போலீஸ் கமிஷன் போட்டதன் விளைவாக உருவாக்கியிருக்கிறது.
இப்பொழுது மீண்டும் திரு. சபாநாயகம் அவர்களுடைய தலைமையில் - முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. சபாநாயகம் அவர்களுடைய தலைமையிலே அந்தக் கமிஷன் அமைக்கப் பட்டது. நம்முடைய நிக்லி அவர்கள்கூட சொல்வார்கள் தலைமைச் செயலாளர் ஓய்வு பெற்றவர்களுடைய தலை மையிலே அமைப்பதைவிட ஓய்வு பெற்ற ஐ. பி. எஸ். அதிகாரி தலைமையிலே அமைக்கலாம் என்று சொன்னார்கள். அந்தக் கருத்தும் உள்ளத்திலே இருந்த காரணத்தால்தான் ஓய்வு பெற்ற