கலைஞரின் சட்டமன்ற உரைகள்
403
ஐ. பி. எஸ். அதிகாரி திரு. ஷெனாய் அவர்கள் அந்தக் கமிஷனிலே ஒரு உறுப்பினராக ஆக்கப்பட்டிருக்கிறார். அஃதன்னியில் ரமணி நடராஜன், சிதம்பரம், ராஜகோபால், அண்மையில் மறைந்த நண்பர் டாக்டர் சந்தோஷம் இவர்களை யெல்லாம் உறுப்பினர்களாகக் கொண்ட அந்தப் போலீஸ் கமிஷன் வெகு விரைவில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் 31-7-1990-க்குள் அரசுக்கு அறிக்கை தருவதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது.
அதைப்போலவே அண்ணா பதக்கம், 1969 ஆம் ஆண்டு அண்ணா மறைந்த பிறகு, அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரத்தில், அண்ணா பிறந்த நாளில் அண்ணா பதக்கம், வீர விருதுகள் காவல் துறையினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அது குடியரசுத் தலைவர் ஆட்சி 1976-ல் வந்தபோது நிறுத்தப்பட்டு, பிறகு அ. தி. மு. .க ஆட்சியில் நினைவூட்டப்பட்டு, சில ஆண்டுகள் நடைபெற்று, பிறகு 1987-88-ல் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறாமல் முடங்கிப்போய், இப்போது மீண்டும் 1989-ம் ஆண்டில் நான் அறிவித்தவாறு செப்டம்பர் 15-ம் நாள் அண்ணா பதக்கம் 55-க்கும் மேற்பட்ட காவல்துறை நண்பர்களுக்கு, வீரவிருதுகள் வழங்கப்பட்டதை உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
அதைப்போலவே பழிவாங்கப்பட்டவர்கள் 7, 8 பேர் களுக்குத்தான் வேலை கிடைத்து இருக்கிறது. மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது. குறிப்பாக யார் யார் என்று எழுதி அனுப்பப்படுமானால், என்ன காரணத்திற்காக அவர்கள் பழி வாங்கப்பட்டார்கள் என்று எழுதி அனுப்பப்படு மானால் அரசு கவனிக்கத் தயாராக இருக்கிறது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அலுவலர்கள் அந்தோணிசாமி - உதவி ஆய்வாளர் வி. நாகராஜன் - உதவி - ஆய்வாளர், நைனார்தாஸ் - உதவி ஆய்வாளர், மானவயல் பூபால ராயர் - தலைமைக் காவலர், சுப்பையா காவலர், சொக்கலிங்கம் முதல்நிலைக் காவலர், பழனிச்சாமி - காவலர், ஆடியபாதம் காவலர், பூதப்பன் காவலர் ஆகிய ஒன்பது பேருக்கு இந்த அரசு கடந்த ஆண்டிலே மீண்டும் பதவி அளித்துவிட்டது என்பதை நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
-
—
-
—