404
காவல்துறை பற்றி
அதைப்போல இறந்துவிட்ட காவலர்களுடைய வாரிசு களுக்குப் பதவி தர வேண்டும். வேலை வாய்ப்புத் தரவேண்டு மென்ற வகையிலே போதுமான இளநிலை உதவியாளர்கள் ஏற்கெனவே இருக்கிற காரணத்தால், அந்த இளநிலை உதவியாளர் பணிகளை அவர்களால் பெற இயலவில்லை என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த அடிப்படையில், கல்வித் தகுதி, மற்றும் உடற்கூறு தகுதி உள்ளவர்களுக்கு காவலராகவோ அல்லது உதவி ஆய்வாளராகவோ - கருணை அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, 1988-ஆம் ஆண்டு 73 பேர் வாரிசுதாரர்கள் நியமிக்கப்பட்டிருக்க, 1998 ஆம் ஆண்டு 162 பேர் வாரிசுதாரர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், அந்தப் பட்டியலில் சுமார் 220 பேர் இருக்கிறார்கள் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த ஆண்டு தான் சந்தேக கேஸ்கள், முக்காடு கேஸ்கள் ஒழிக்கப்படும் என்று நான் சொன்னேன். இல்லா விட்டால் இராமலிங்க சுவாமிகள் தெருவில் நடந்தால் கூட பிடித்து விடுவார்கள். (சிரிப்பு). அப்படி முக்காடு கேஸ்களை பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி பிடிக்கப்பட்ட முக்காடு கேஸ்கள் ஆண்டு ஒன்றுக்கு 50,000 அல்லது 40,000 என்ற அளவில் இருந்தது. 1987-ஆம் ஆண்டில் மாத்திரம் 46,000 முக்காடு கேஸ்கள், சந்தேக கேஸ்கள்; 1988-ஆம் ஆண்டில் 50,370 முக்காடு கேஸ்கள், சந்தேக கேஸ்கள். இவைகள் எல்லாம் பிடிக்கப்பட்ட கேஸ்கள். வழக்கு வரையில் வந்தவை. வராமல் ஆங்காங்கு, அவர் இவரைப் பார்த்து, இவர் அவரைப் பார்த்து, போய்விட்ட வழக்குகள் 50,000 இருக்கும். எனவே, ஒரு லட்சம் பேர் இந்த முக்காடு கேஸ்களால் தொல்லைப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். இதை அதிகாரிகள் எல்லாம் கூட கொஞ்சம் தயக்கத்தோடு என்னிடத்தில் சொன்னாலும் கூட, அண்ணா காலத்திலிருந்து செய்யப்பட்ட முயற்சி, அதிகாரிகள் குறுக்கே நின்றார்கள். நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அதிகாரிகள் குறுக்கே நின்றாலும், அதை மீறி அரசு நல்ல காரியங்களைச் செய்யும் என்று திரு. வரதராசன் அவர்களுக்கு சொல்வதற்காகக் குறிப்பிடுகிறேன். எனவே, இந்தக் கேஸ்களை