உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

காவல்துறை பற்றி

மாண்புமிகு உறுப்பினர்களுக்கும், மாநிலப் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

காவல் துறையிலே இரண்டு வகையினர்கள் உண்டு. ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தபோது 1968-லே இங்கே உரையாற்றிய போது ஒன்றைக் குறிப்பிட்டார்கள். எல்லோருக்கும் தெரிந்த ஒரு வேடிக்கையான கதையைத்தான் இங்கே குறிப்பிட்டார்கள்.

திரு. கருத்திருமன் அன்று எதிர்க்கட்சித் தலைவர். அவர் வேடிக்கையாக ஒன்று சொல்ல, அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். யாரோ ஒருவன் தெருவிலே போய்க் கொண்டிருந்தான். ஒரு வீட்டுக்குள்ளேயிந்து 'காலை வெட்டு, கையை வெட்டு, கழுத்தை வெட்டு' என்று சத்தம் கேட்டது. உடனே, போலீஸ் அதிகாரி அதைக் கேட்டு, லாரியிலே போலீஸை அழைத்து வந்து உள்ளே நுழைந்தால், அங்கே சட்டை தைத்துக் கொண்டிருந்தார்கள் என்று வேடிக்கையாகச் சொன்னார். அதை நான் பார்த்தபோது, எனக்கு இன்னொரு கதையும் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. இரண்டு கதைகளுக்கும் உரியவர்களாக நமது காவலர்கள் இருக்கிறார்கள். எதுவும் நடக்காமல் இருக்கும் போதே உள்ளே நுழைந்து, சட்டை தைப்பவனைப் பார்த்து, அவன் கொலைகாரன். ஏனென்றால் கழுத்தை வெட்டு, காலை வெட்டு, கையை வெட்டு என்று சொன்னான். ஆகவே, கொலைகாரன் என்று சொல்லுகின்ற காவல் துறையினர் ஒரு வகை. இன்னொரு வகை, உள்ளபடியே, கொலை நடக்கின்ற இடத்திற்கு வெளியே சென்றுகொண்டிருக்கக் கூடிய காவல் துறை அதிகாரி, உள்ளே 'கழுத்தை வெட்டு, காலை வெட்டு, கையை வெட்டு' என்று சத்தம் கேட்கிறபோது, பக்கத்திலேயுள்ள காவல் துறை நண்பர் அதிகாரியைப் பார்த்து "என்னய்யா, அப்படி சத்தம் கேட்கிறது” என்று சொன்னபோது, “அதெல்லாம் ஒன்றுமில்லை, டான்ஸ் மாஸ்டர் வீடு, அவர் காலை வெட்டு, கையை வெட்டு என்று பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்" என்று சொல்வதைப் போலவும் சில காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். நடனம் கற்றுக் கொடுக்கிறார்; நடனத்திற்கான அபிநயத்திற்கு கையை வெட்ட வேண்டும், காலை வெட்ட வேண்டும், முக்கியமாகக் கண்ணை வெட்ட வேண்டும். எனவே அதைச் சொல்லிக்கொடுக்கிறார்