கலைஞரின் சட்டமன்ற உரைகள்
421
படவேண்டும் என்று மாண்புமிகு உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவரும் கோடிட்டுக் காட்டியதைப்போல, இந்தக் காவல் துறை மேலும் சீர்செய்யப்பட வேண்டுமென்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை என்பதை இங்கே தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மன்றத்திலே ஒருமுறை பேசும்போது நான் குறிப்பிட்டேன். ஈரல் 75 சதவீதம் கெட்டு விட்டதைப் போல காவல் துறை கெட்டுவிட்டது என்று குறிப்பிட்டேன். ஒரு பத்திரிகையிலேகூட சொக்கர் அவர்கள் அந்தமாதிரி முதலமைச்சர் சொல்லியிருக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார்கள். அதிலே 1 சதவீதம், 2 சதவீதம் எனக்கும், அவருக்கும் வித்தியாசம் இருக்கலாம். அதிக அளவுக்கு காவல் துறை கெட்டுப்போய் விட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இங்கே பேசிய யாரும் மறுக்கவில்லை. ஈரல் கெட்டுவிட்டது என்று சொல்கிறபோது ஒரு உண்மையை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஈரல் ஏன் கெடுகிறது? எந்த ஈரலும் தானாகவே கெடுவதில்லை. ஈரல் மனிதனுடைய உடலிலே இருக்கின்ற ஒரு உறுப்பு. அதைக் கெடுப்பவன் மனிதன்தான். தேவையற்ற, அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதன் மூலமும், தேவைப்படுகிறது என்று போதைத் த ண்ணீரைக் குடிப்பதன் மூலமும் ஈரலைக் கெடுத்துக் கொள்கிறான். அதைப்போலத்தான் இந்த நாடு, அரசு என்கிற அமைப்பில், மனித உருவத்தில் ஈரல் உறுப்பாக இருப்பதுபோல. காவல் துறை இருக்கிறது. எனவே காவல்துறை என்பது தானாகவே கெடுவதில்லை. குடித்து ஈரலைக் கெடுத்துக் கொள்வதைப் போல, காவல் துறையைக் கண்காணிக்கின்ற அரசு வெறியோடு, போதையோடு நடந்துகொள்ள வேண்டுமென்று எண்ணிய காரணத்தால் ஈரல் கெட்டுவிட்டதைப் போல 75 சதவீதம் கெட்டு விட்டது. (மேசையைத் தட்டும் ஒலி). இப்போது அந்த ஈரலைக் குணப்படுத்துகின்ற பணியிலே நாம் ஈடுபட்டதன் காரணமாக ஓரளவு வெற்றிப் பெற்றிருக்கிறோம் என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் மிக நன்றாக அறிவார்கள். எனவே ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 75 சதவீதம் கெட்ட ஈரலில் 50 சதவீதம் தப்பித்துக் கொண்டது என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. விரைவில் குணம் பெற்று கம்பீரமாக காவல் துறை உறுதியோடு, நேர்மையோடு, நாணயத்தோடு (மேசையைத் தட்டும் ஒலி) நடமாடும், நடைபோடும் என்பதை இந்த மன்றத்திலேயுள்ள