உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

காவல்துறை பற்றி

இவைகளெல்லாம் வெளியிடப்படுகின்ற இந்த நேரத்தில், கடந்த கால ஆட்சியில், சென்னை, சேத்துப்பட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் குண்டு வீச்சு, தேன்கனிக் கோட்டை கோவில் விழாவிலே குண்டு வீச்சு, திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வீட்டில் குண்டு வீச்சு, சேலம் அருகே வாழப்பாடியில் 8 பேர் கொல்லப்படுகின்ற அளவுக்கு வெடிகுண்டு வீச்சு, குடவாசலில் அ.இ.அ.தி.மு.க. அலுவலகத்திலேயே குண்டு வீச்சு, சிதம்பரனார் மாவட்டத்தில் 3 பேர் இறக்கக் காரணமாக இருந்த குண்டு வெடிப்பு,

சென்னை, இலங்கைத் தூதுவர் அலுவலகத்தில்

வெடிகுண்டு வீச்சு. நாகப்பட்டினத்தில் குண்டு வெடித்து இந்து முன்னணித் தலைவர் மனைவி சாவு. இந்த 9 சம்பவங்கள் உட்பட 1995ஆம் ஆண்டில் மாத்திரம் குண்டு வெடிப்பு, நாட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்கள் 40 பேர். காயம்பட்டவர்கள் 127 பேர். துப்பாக்கிச் சூடு பற்றி இங்கே எடுத்துக் காட்டினார்கள். 1991ஆம் ஆண்டு 33 சம்பவங்கள், 1992ஆம் ஆண்டு 67 துப்பாக்கிச் சூடுகள், 1993ஆம் ஆண்டு 63 துப்பாக்கிச் சூடுகள், 1994ஆம் ஆண்டில் 23 துப்பாக்கிச் சூடுகள், 1995ஆம் ஆண்டில் 30 துப்பாக்கிச் சூடுகள். திரு. திருநாவுக்கரசு பேசும்போது சொன்னார்கள். இப்போதுகூட 1996-லே 23 துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றிருப்பதாகச் சொன்னார்கள். தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகள் சூடுகள் 15, 15, அதற்குப் பிறகு நடைபெற்றிருப்பது 8. இந்த 8 துப்பாக்கிச் சூடுகளைக் கூட நான் வரவேற்கவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூடுகள் இனியும் தொடர்ந்து 9, 10 என்று பெருகாமல் தவிர்ப்பதற்கு பெரும் பொறுப்பு காவல் துறைக்கும் இருக்கிறது, தரவேண்டிய ஒத்துழைப்பு பொது மக்களுக்கும் இருக்கிறது. காவல் துறையும், பொதுமக்களும் இணைந்து சமூகவிரோதிகளை தண்டிக்கக்கூடிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் இருக்கிறது என்பதை சட்டப்படி, நியதிப்படி நான் எடுத்துக்காட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.

8

இத்தனை வன்முறை நிகழ்ச்சிகள், குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள், இவைகளிலே கடந்த காலத்திலே போலீஸார் காட்டிய தீவிரமற்ற நடவடிக்கைகள் போன்ற இவைகளெல்லாம் களையப்