உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

காவல்துறை பற்றி

கமிஷனுடைய இந்தக் கருத்துகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப் பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை நான் இந்த அவையிலே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் இன்னொன்றையும் குறிப்பிட்டார்கள். அவர்கள் அதிகம் இந்த அவையிலே பேசாவிட்டாலும், பேசுகிற ஒவ்வொரு நேரத்திலும் ஆழமான பல கருத்துக்களை, பல செய்திகளை அகழ்ந்தெடுத்து சொல்கிறார்கள். அந்த வகையிலே இன்றைக்குத் தந்துள்ள இன்னொரு கருத்து பழைய ஐ. ஜி. ஆபீஸ் பற்றியதாகும். கடந்த கால ஆட்சியில் மக்களுக்குத் திட்டங்கள் தீட்டுவதாகக் கூறி அவைகளில் தங்களுக்கு என்ன ஆதாயம் என்று பார்த்த ஒரு நிலை இருந்த காரணத்தால் தேவை இல்லாமல் கடற்கரையிலே உள்ள டி. ஜி. பி. அலுவலகத்தை இடிக்கப்போகிறோம் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதை இடித்துவிட்டு மிக உயரமான ஒரு கட்டிடத்தை எழுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. மூதறிஞர் இராஜாஜி அவர்கள் சென்னை கடற்கரையின்மீது அபாரமான ஆசை கொண்டவர்கள். அதுமாத்திரம் அல்ல, அவர்கள் சொல்வார்கள், சென்னை மெரினா கடற்கரைதான் சென்னை மாநகரத்திற்கே சுவாசப்பை என்று சொல்வார்கள். எனவே கடற்கரை ஓரத்திலே உயரமாகக் கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது என்பதிலே அவர்கள் அழுத்தமான கொள்கை கொண்டு அப்படி ஏதாவது கட்டிடங்கள் தோன்றினால் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்கள். பலரும் படித்திருக்கக்கூடும். ஆனால் கடந்த கால ஆட்சியில் ஜெயலலிதா அவர்கள் போலீஸ் துறைக்கும் அமைச்சர் என்ற முறையில் அந்த டி. ஜி. பி. அலுவலகக் கட்டிடத்தை இடித்து விடுகின்ற முயற்சியிலே ஈடுபட்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக அங்கே இருந்த அலுவலகத்தை நம்முடைய அரசினர் தோட்ட வளாகத்திற்குள்ளே மாற்றியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். யாரோ சிலபேர் அங்கே அந்தக் கட்டிடத்தை இடிக்கக்கூடாது என்று நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றிருக்கிற காரணத்தால் அது இடிக்கப்படாமல் நின்று கொண்டிருக்கிறது. அருள் அவர்கள் எழுதியுள்ள அந்தப்