உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

431

புத்தகத்திலே அந்தக் கட்டிடத்தைப் பற்றிச் சொல்லுகிறார்கள்; விரிந்த நீலக் கடலைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் நமது அலுவலகத்தைப் போல, காவல்துறை அலுவலகத்தைப்போல, இந்தியாவிலே மட்டுல்ல உலகில் எந்த போலீஸ் தலைமையகமும் இவ்வளவு அழகான சூழ்நிலையிலே அமையவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த அலுவலகம் முன்பு 'மெசோனிக் லாட்ஜ்' என்ற நிலையில் இருந்தது. அதாவது ரோட்டரி கிளப் போன்று உலகம் முழுவதும் கிளைகள் உள்ள ஒரு அமைப்பாக இருந்தது. 1850ல் அந்த நாளிலேயே 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் கட்டிடத்தை பிரிட்டிஷ் அரசு விலைக்கு வாங்கி யிருக்கிறது என்று அருள் அந்தப் புத்தகத்திலே குறிப்பிட்டிருக் கிறார்கள். அப்படி இந்தியாவிலே எங்கும் இல்லாத ஒரு காவல்துறை கட்டிடத்தை தேவை இல்லாமல் இடிக்கப்போய் அதற்கு ஒரு தடை ஆணையை பெற்றிருக்கிற இந்தச் சூழ்நிலையை சிந்தித்து நேற்றையதினம் நான் எடுத்திருக்கிற முடிவு, காவல்துறை அதிகாரிகளை மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகளைக் கலந்துகொண்டு எடுத்திருக்கிற முடிவு, அந்தக் கட்டிடம் இடிக்கப்படாது, மீண்டும் அங்கேயே டி. ஜி. பி. அலுவலகம் இயங்கும் என்பதுதான் (மேசையை தட்டும் ஒலி). இடம் போதவில்லை என்றால் - டி.ஜி.பி. அலுவலகம் - இப்போது இருக்கின்ற அந்தக் கட்டிடத்திற்குப் பின்னால் நிறைய இடம் இருக்கிறது அங்கே அதிக உயரம் இல்லாத ஒரு கட்டிடத்தைக் கட்டி துணையாக இடவசதியைப் பெருக்கிக்கொள்ள இயலும் என்பதற்காக இதைச் சொல்லுகின்றேன்.

நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் ரங்கநாதன் அவர்களும், நம்முடைய அப்துல் லத்தீப் அவர்களும், நம்முடைய பழனிசாமி அவர்களும், மற்றும் சுப்பராயன் அவர்களம் வேறு பல ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், அத்தனை பேரும் பேசும்போது, சில வழக்குகளை எல்லாம் குறிப்பிட்டு என்ன நடவடிக்கை என்று கேட்டார்கள். நான் உங்களுக்கு ஒரு விளக்கம் அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன். முதலில் சந்திரலேகா மீது திராவகம் வீசிய வழக்கு. ஏதோ இந்த வழக்கை இன்று உள்ள அரசு நடத்த தயங்குகிறது என்று எல்லாம் வெளியே பேசப்படுகிறது. எத்தனை முறை விளக்கம் அளித்தாலும் கூட