432
காவல்துறை பற்றி
அப்படி பேசப்படுகின்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து பத்திரிகைகளும் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. உண்மை என்னவென்றால், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா 19-5-92 அன்று திராவக வீச்சுக்கு ஆளானார். 15-12-92 அன்று சந்திரலேகா சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. உடனடியாக சந்திரலேகா அவர்கள், உச்சநீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்து கொண்டார். உச்ச நீதிமன்றத்தினுடைய ஆணையின்படி, சென்னையில் குற்றவாளி என்று கருதப்படுகின்ற சுர்லாவினுடைய வாக்கு மூலம் வாங்கப்பட்டது. அப்படி வாங்கப்பட்ட அந்த வாக்குமூலம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலே அந்த வாக்குமூலம் இருக்கிறது. அதிலே என்ன இருக்கிறது என்று வெளியிலே யாரும் பேசிக்கொள்ளலாம். ஆனால், சுர்லா கொடுத்த வாக்குமூலம் உச்ச நீதிமன்றத்திலே இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கின்றது என்பதுதான் உண்மை. சி. பி. ஐ. விசாரிக்கக் கூடாது என்பது கடந்த கால ஜெயலலிதா அரசினுடைய வாதம். சி. பி. ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்பது சந்திரலேகாவினுடைய வாதம். உச்ச நீதிமன்றத்திலே, இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், கழக அரசு பொறுப்பேற்ற பிறகு நாம் என்ன சொல்லி இருக்கிறோம் என்றால் - நீதிமன்றத்திலே இன்னும் சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏன் என்றால், அங்கு விசாரணையே நடைபெறவில்லை, உச்சநீதிமன்றத்தில். ஆனால், நாம் வெளிப்படையாகச் சொல்லி இருப்பது - சி. பி. ஐ. விசாரணை செய்வது பற்றி சந்திரலேகா வழக்கு தொடர்ந்து இருக்கிறார், அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. சி. பி. ஐ. தாராளமாக விசாரிக்கலாம், தமிழக அரசு குறுக்கே நிற்காது என்று நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம். ஆனால், உச்ச நீதிமன்றத்திலே 16-7-96 அன்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி விடுப்பிலே, லீவிலே, இருந்த காரணத்தால், விசாரணை நடைபெறவில்லை. மேலும், சந்திரலேகாவினுடைய வழக்குரைஞ ருடைய அசௌகரியத்தைப் பொறுத்தும், இந்த வழக்கிலே விவாதத்தைத் தொடர முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கு உச்ச நீமின்றத்திலே பரிசீலனைக்கு வந்தபோது