கலைஞரின் சட்டமன்ற உரைகள்
445
சேர்த்துக் கொள்வது என்று கழக அரசு முடிவெடுத்து, இந்த சட்டமன்றத்திலே ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதையும் நினைவுகூற விரும்புகிறேன்.
முந்தைய ஆட்சியில் காவலர்கள் நியமனத்தின் போது ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நிறைவு செய்ய தகுதி வாய்ந்த போதுமான ஆதி திராவிடர் இன நபர்கள் கிடைக்கவில்லை என்று காரணம் காட்டப்பட்டு அந்த இடங்கள் நிரப்பப்படாமல் விடுபட்டிருந்தன. இந்த அரசு பொறுப்பேற்றவுடன் துரிதமாக நடவடிக்கையெடுத்து தமிழ் நாடு காவல் துறை மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் தேர்வாணையக் கழகம் மூலம் தகுதியுள்ள ஆதிதிராவிடர் இன இளைஞர்கள் 454 பேர்களை தேர்வு செய்து அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
மானியக் கோரிக்கைகளில் பேசிய உறுப்பினர்கள் 1989ஆம் ஆண்டு கழக ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது காவலர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 2000 நபர்களுக்கு அடுத்து வந்த ஆட்சி நியமன ஆணை வழங்கத் தவறிவிட்டது என்றும், நியமன ஆணை வழங்கப்படாததால் அந்த 2000 நபர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள் என்றும் தெரிவித்தார்கள். ஆனால் இந்த 1989-ல் தேர்வு செய்யப்பட்ட 2000 நபர்களைப் பொறுத்த வரையில் கழக ஆட்சி கலைக்கப் பட்டதற்குப் பின்னர் வந்த கவர்னர் ஆட்சியிலும் சரி, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் சரி மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ளவில்லை.
கழக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்றவுடன், பல உறுப்பினர்கள் இம்மன்றத்தில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், இப்பிரச்சினையை அணுகி ஆய்வு செய்ததில், ஏற்கனவே இந்த 2000 நபர்களில் 350 நபர்கள் நீதிமன்றத்தை அணுகி, தங்களுக்குச் சாதகமான ஆணைகளைப் பெற்று, பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள், என்று இப்போது தெரிய வந்துள்ளது. அவ்வாறு பணி நியமனம் பெற்றவர்கள் போக,