உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

453

கட்சியின் சார்பில் பேசியவர்களாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற கட்சிகளின் சார்பில் பேசியவர்களாக இருந்தாலும் சரி, அத்தனைபேரும் மேலும் காவல் துறை நல்லமுறையில் செயலாற்றிட வேண்டும் என்பதற்கான ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத்தான் இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள். நான் காவல் துறைக்காக வக்காலத்து வாங்க, இங்கே எடுத்து வைத்த குறைபாடுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல மாத்திரம் இங்கே நிற்கவில்லை. நீங்கள் எடுத்து வைத்த குறைபாடுகள் பலவற்றை நான் ஏற்றுக்கொண்டு, அந்தக் குறைபாடுகளை நீக்குவதற்காக என்னென்ன செயல்முறைகளைத் தீட்ட வேண்டுமோ அவைகளைத் தீட்டுவேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிற வகையில்தான் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

காவல் துறையில் 'இந்தியாவில்' அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் காவல் துறைக்கு என்ற ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்தான். அதுவும் ஒரு முறையல்ல இரண்டு முறைகள் அந்த கமிஷன் அமைக்கப் பட்டது. முதல் கமிஷன் ஏறத்தாழ 1970ஆம் ஆண்டில் நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஆர். ஏ. கோபாலசாமி அய்யங்கார் அவர்களுடைய தலைமையில் போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, அவர்கள் அளித்த பல பரிந்துரைகளை அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றியது. அந்த அடிப்படையில்தான் லத்தீப் அவர்கள் இங்கே சொன்னார்களே, காவல் துறையில் சாதாரண காவலருக்கு அப்போது 80 ரூபாய்தான் மாத ஊதியம். அந்த 80 ரூபாய் மாத ஊதியம் 230 ரூபாயாக மாறுவதற்குக் காரணமாக இருந்ததே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை நான் இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன். ஏனென்றால் அந்த கோபால்சாமி அய்யங்கார் அவர்களுடைய கமிஷன் அறிக்கையின்படி, அது சொன்ன சிபாரிசுகள், பரிந்துரைகள் அத்தனையும் முக்கால் பகுதி எற்றுக்கொள்கிற நிலையில்தான் அந்தக் சம்பள விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. மீண்டும் 1989-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த சபாநாயகம், I.A.S. அவர்கள் தலைமையில் இன்னொரு போலீஸ்