உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

காவல்துறை பற்றி

அப்படிப்பட்ட கொடுங்கையூர் நிகழ்ச்சியிலே ஈடுபட்டு பணியாற்றிய காவல் துறையினருக்கு ஏன் இன்னும் பதக்கங்களோ அல்லது பதவி உயர்வுகளோ தரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே சொன்னார்கள். பதவி உயர்வு தருவது, பதக்கம் தருவது இதிலே எந்தவிதமான கஞ்சத்தனமும் இந்த அரசுக்குக் கிடையாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பதக்கத்திற்காக நடைபெறுகின்ற நிகழ்ச்சியின்பொழுதுதான் இந்தப் பதக்கம் பெற்றவர்களுக்கெல்லாம் பதக்கம் வழங்குவது வழக்கமாக இருப்பதால் அவர்களுக்கே இத்தகைய பதக்கங்களை, பரிசுகளை அளித்துவிட்டு அதை அறிவிக்கின்ற அல்லது அந்த விழாவை நடத்துகின்ற அல்லது அவர்களுக்கு அணிவிக்கின்ற நிகழ்ச்சியாக, அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி அல்லது அண்ணா பதக்கம் தருகின்ற நிகழ்ச்சியிலே அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

பதவி உயர்வுகளைப் பற்றிச் சொன்னார்கள். இது நாங்களாகச் செய்தால் நன்றாக இருக்காது என்றுதான் எதிர்க்க்ட்சிகள் சொல்லிச் செய்தால், பிறகு ஒரு பேச்சுக்கு இடம் இல்லாமல் போய்விடும் என்று நீங்கள் சொல்லட்டும் என்று காத்திருந்தேன். நிச்சயமாகச் செய்யப்படும் என்ற உறுதியை எதிர்க்கட்சித் தலைவருக்கும், மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்ள வேண்டியவனாக இருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

மதுவிலக்குச் சட்டத்தினுடைய தீவிர செயலாக்கத்தை இந்த அரசு கடைபிடிக்கிறதா இல்லையா என்பதற்கு நான் இங்கே வெளிப்படுத்த விரும்புகின்ற ஒன்று கடந்த ஆண்டு நாம் இந்தக் காவல்துறையில் இருக்கின்ற மதுவிலக்குப் பிரிவினால் புகார்கள் தான் அதிகமாக வருகிறதேயல்லாமல் இந்த மதுவிலக்குக் கொள்கையை நிறைவேற்றுகின்ற வெற்றி முகப்பை நாம் காண இயலவில்லை என்று விளக்கம் அளித்து இந்த மதுவிலக்கு செயலாக்கப் பிரிவு கலைக்கப்படுகிறது என்று அறிவித்து அவையிலே உள்ள அனைவரும் அன்றைக்கு கையொலி செய்து அன்றைக்கு அனைவரும் கையொலி செய்து அதை