உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

513

ஒப்பிட்டுப் பார்க்கத் தவறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இதைச் சொல்கின்றேன்.

முன்கூட்டியே புலன் விசாரணையிலே தகவல் வந்தது. உளவுத்துறையினுடைய தகவல் வந்தது. அதை வைத்து நாங்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாகத்தான், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி முடிய தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீஸ் இலாகா மாவட்ட ரீதியாக, ஆங்காங்கு பணியாற்றியதன் காரணமாகத்தான் மாநிலம் முழுவதும் 49 வழக்குகள்; 81 பேர் கைது; நாட்டு வெடிகுண்டுகள் 2,000 கைப்பற்றப்பட்டன. ஜெலட்டின் குச்சிகள் 586 கைப்பற்றப்பட்டன. டெட்டனேட்டர்கள் 1,595, உரிமம் இல்லாத துப்பாக்கிகள் 8, ரிவால்வர் 2 என்று கைப்பற்றப்பட்டன. ஆனால் அங்கே மாத்திரம், கோவையிலே மாத்திரம் திரு. அத்வானியைக் காப்பாற்றுவதிலே காட்டிய அக்கறை, அவர்களுக்குச் சரியான தகவல் அங்குள்ள உள்ளூர் போலீஸ்காரர்களால் தரப்படாததால் ஏற்பட்ட தொய்வு, இவைகளின் காரணமாக போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்கத் தவறியது, அதற்காகத்தான் இந்த அரசு அவரிடம் இன்றைக்கு விளக்கம் கேட்டு கடும் நடவடிக்கைக்கான குற்றச்சாட்டை அவர்மீது சுமத்தியிருக்கின்றது. இவ்வளவுக்கும் பிறகு, இதிலே குறைபட்டுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதைத் தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். C.B.I., C.B.I என்று இதற்குக்கூட C.B.I. விசாரணை வைக்க வேண்டும் என்று நம்முடைய ஞானசேகரன் இங்கே வலியுறுத்தினார். எங்கெங்கேயோ ஆரம்பித்து, போயஸ்கார்டனிலே ஆரம்பித்து, C.B.I. விசாரணை இந்த வழக்குக்கு வைக்க வேண்டும் என்பது திரு. ஞானசேகரன் வரையிலும் வந்தாயிற்று.

நான் ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். திரு. அத்வானி கோவைக்கு வந்து இவ்வளவு நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கின்றன என்ற செய்தி எனக்கு எப்போது கிடைத்தது என்றால் - தலைவர் மூப்பனாரும் நானும், மாணிக்கம் அவர்களும் மற்றும் தோழமைக் கட்சிகளினுடைய தலைவர் களும், நம்முடைய அப்துல் லத்தீப் அவர்களும், எல்லோரும் சென்னையிலே அன்றைக்கு, 14 ஆம் தேதியன்று, சிந்தாதிரிப்