கலைஞரின் சட்டமன்ற உரைகள்
559
மாண்புமிகு உறுப்பினர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியோடு
தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்னொன்று, தடய அறிவியல் துறைக்குத் தன்னாட்சிப் பொறுப்பு வேண்டுமென்று நீண்ட காலமாக ஒரு கோரிக்கை இருந்து வருகின்றது. வெவ்வேறு பிரிவுகளாக 1849ஆம் ஆண்டிலேயிருந்து இயங்கிவரக்கூடிய தடய அறிவியல் துறை சிறிது காலம் தவிர, தனித் துறையாகவே இயங்கி வந்தது.
தமிழ்நாடு காவல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் 1995ஆம் ஆண்டு காவல் துறையின்கீழ் இந்தத் துறை கொண்டு வரப்பட்டுவிட்டது. 1995-லேயிருந்து இந்தத் துறைக்கு மீண்டும் தன்னாட்சி வழங்க வேண்டும் என்று இந்தத் துறையிலே பணியாற்றிக்கொண்டிருந்த அறிவியலாளர்கள் கோரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தார்கள். 1999ஆம் ஆண்டு சனவரித் திங்கள் சென்னையிலே நடைபெற்ற 86-வது இந்திய அறிவியல் மாநாட்டின்போதுகூட தடய அறிவியல் அவையைத் தொடங்கி வைத்துப் பேசிய தேசிய மனித உரிமை ஆணையத்தினுடைய உறுப்பினர் நீதியரசர் திரு. மாலிமத் அவர்கள் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் பொருட்டு, தடய அறிவியல் துறை தனித் துறையாக இயங்குவதுதான் விரும்பத்தக்கது என்ற கருத்தைத் தெரிவித்தார்கள். இந்நிலையில், தன்னாட்சி பொறுப்பு வழங்க சாதகமாகக் கூறப்பட்ட கருத்துகள் மற்றும் அதற்கு எதிராக வைக்கப்பட்ட கருத்துகள், இவைகளையெல்லாம் நன்கு ஆராய்ந்து பார்த்து, தடய அறிவியல் துறையை உள் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் தனித் துறையாக இயங்க அனுமதிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. காவல் துறையினுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் உள் துறையினுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் தனித் துறையாக இயங்க அனுமதிக்கலாம் என்று பல ஆண்டுகாலமாக இருந்த இந்தக் கோரிக்கை நிறைவேற்றப் பட்டிருக்கின்றது.
மதுபானக் கடைகளிலே சட்டவிரோதமாக Bar - நடத்துவது பற்றி அன்றைக்குப் பேசப்பட்டது. அதிலேகூட த. மா. கா.-வைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் Bar-ஆவது வைத்துவிடுங்கள் என்று குறிப்பிட்டார். உடனே திரு. ஞானசேகரன் எழுந்து, அது எங்கள்