578
காவல்துறை பற்றி
இந்துக்கள் 195 பேர், கிருத்துவர் 2 பேர் மொத்த நிவாரணம் 1 கோடியே 1 இலட்சத்து 67 ஆயிரத்து 45 ரூபாய். இதை அரசு ஏற்றுக்கொண்டு 7-5-1999 அன்றே ஆணை பிறப்பித்துவிட்டது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) நீதிபதி தன்னுடைய அறிக்கையிலே இதுபற்றிக் குறிப்பிட்ட வாசகம் குறிப்பிடத்தக்கது. “அரசு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மிக விரைவான நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்கியது. பாதிக்கப்பட்டவர் களுடைய காயத்தை ஆற்ற உதவியுள்ளது. அரசால் வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணம் மற்றும் கூடுதல் இடைக்கால நிவாரணம், பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு அளிக்கப்பட மிகவும் உதவியுள்ளது. இதனை நீதிமன்றத்தில் விசாரணையின்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசால் அளிக்கப்பட்ட இடைக்கால மற்றும் கூடுதல் இடைக்கால நிவாரணத்தால் மிகவும் மகிழ்ந்துள்ளனர்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இன்னொரு செய்தி, இங்கேயுள்ள மாண்புமிகு உறுப்பினர் களால் ஏகமனதாக ஒரு காலத்தில் பெருவாரியான ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், பயங்கரவாத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம். POTA Bill - அதைப்பற்றி சட்டசபையிலே நான் கடந்த மாதம் சில கருத்துக்களைச் சொல்லி இருக்கின்றேன். அப்போது பேசிய திரு. லத்தீப் அவர்கள் அந்தச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை; திருப்பி அனுப்பிவிட்டார் என்று சொன்னார்கள். நான் அப்போது, அது தவறு; அப்படியல்ல; இது குடியரசுத் தலைவருக்கே இன்னும் போகவில்லை; மத்தியில் உள்ள உள் துறை அதைப்பற்றிச் சில கருத்துகளை, விளக்கங்களைக் கேட்டிருக்கிறது. அந்த விளக்கங் களைப் பற்றித்தான் நாங்கள் யோசித்துக்கொண்டு இருக்கிறோம்; செலக்ட் கமிட்டிக்கு விடலாமா என்றுகூட எண்ணி இருக்கிறோம் என்று குறிப்பிட்டேன். ஆனால், அப்படிக் குறிப்பிட்ட பிறகு, அதை செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்றும், 'கடிதோச்சி மெல்ல எறிக' என்ற அரசாக இந்த அரசு இருக்கும் என்றும் அன்றைக்கு நான் விளக்கி இருக்கிறேன். ஆனால், இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. 19-4-1999 அன்று சட்டத்