உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




586

காவல்துறை பற்றி

காவல் துறையில் மதம், ஜாதி இவையெல்லாம் தலைக் காட்டக்கூடாது என்ற ஒரு நல்ல தத்துவத்தை நம்முடைய அருமை நண்பர் அப்துல் லத்தீப் அவர்கள் இங்கே எடுத்துக்கூறி, காவல் துறையிலே இஸ்லாமியர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப் படவேயில்லை என்று கூறினார். அதிலும் குறிப்பாக இரகசியப் புலனாய்வுத் துறை போன்ற துறைகளிலிருந்து இஸ்லாமியர்கள் நீக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கூறினார். கடந்த ஆண்டு காவல் துறை மானியத்திலே பேசும்போதும் திரு. லத்தீப் அவர்கள் இதையேதான் கூறினார். இந்த ஆண்டும் அதையேதான் கூறியிருக்கின்றார்.

1989ஆம் ஆண்டு நான் ஆட்சியிலே இருந்தபோதுதான், ஜாபர் அலி அவர்களைப் புலனாய்வுத் துறைப் பொறுப்பில் வைத்திருந்தேன். ஜாபர் அலி என்றாலே அவர் முஸ்லீம் என்று நமக்குத் தெரியும். ஜாபர் அலி செட்டியார் என்றோ, ஜாபர் அலி முதலியார் என்றோ யாரும் சொல்லமுடியாது. அவரைத்தான் புலனாய்வுத் துறைப் பொறுப்பிலே அமர்த்தி அவருக்கு மாநில அளவிலே அந்தப் பொறுப்பை நான் அளித்திருந்தேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மாற்றப்பட்ட பிறகு, வந்த ஆட்சியினர், அவரை என்ன பாடுபடுத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அருமை நண்பர் லத்தீப் அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அந்த வேதனையைத் தாங்கமாட்டாமல் தாமாகவே ஒய்வு பெற்றுக்கொண்டார் ஜாபர் அலி அவர்கள். புலனாய்வுத் துறையிலே தலைமைப் பொறுப்பில் ஜாபர் அலியை நான் நியமித்ததற்கு முன்பு, இஸ்லாமியர் யாருமே இருந்ததில்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதுகூட, எனக்கு முதன்மைப் பாதுகாவலராக இருப்பவர், ஜாபர் சேட், I.P.S. அவர்கள்தான் என்பதை நான் லத்தீப் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காவல் துறையிலே ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்கள் என்று பார்த்தால், S.P. நிலை அதிகாரிகள் 5 பேர்; கூடுதல் S.P. கடந்த ஆண்டு 3 பேர், இந்த ஆண்டு 6 பேர்; D.S.P. கடந்த ஆண்டு 16 பேர், இந்த ஆண்டு 17 பேர். Inspectors கடந்த ஆண்டு வரை 132 பேர், இந்த ஆண்டு 137 பேர். Sub-Inspectors கடந்த ஆண்டு வரையில் 231 பேர், இந்த ஆண்டு 271 பேர். தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள், கடந்த ஆண்டு வரையில் 4,617 பேர், இந்த ஆண்டு 4,648 பேர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு