உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

587

4,604 இஸ்லாமியர்கள் இருந்ததற்கு மாறாக இந்த ஆண்டு 5,084 பேர் காவல் துறையிலே பணியாற்றுகின்றார்கள். காவல் துறையில் மொத்தப் பணியாளர்களுடைய எண்ணிக்கையில் இது 6.3 விழுக்காடு என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். 1 விழுக்காடு உண்டா என்று அன்றைக்கு அவர்கள் ஆணித்தரமாகக் கேட்டார்கள். 6.3 விழுக்காடு காவல் துறை மொத்தப் பணியாளர்களில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இன்னும் சொல்லப்பபோனால், அரசின் முக்கிய துறையான பொதுத் துறையின் செயலாளரே பரூக்கி என்ற இஸ்லாமிய I.A.S. அதிகாரிதான். மாவட்ட ஆட்சித் தலைவர்களில் மூன்று பேர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

இரகசியத் துறையிலே இஸ்லாமியர் இல்லை என்றும், இருந்தவர்கள் நீக்கப்பட்டு விட்டார்கள் என்றும் லத்தீப் அவர்கள் கூறினார்கள். குற்றப் புலனாய்வுத் துறை, ஒற்றாய்வுத் துறை, 'Q' பிரிவு ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் S.P. நிலையில் ஒருவரும், D.S.P. நிலையில் ஒருவரும், 6 Inspector-களும் 7 Sub- Inspector-களும், 30 தலைமைக் காவலர் மற்றும் காவலர்களும் ஆக மொத்தம் 45 பேர் பணியாற்றுகின்றார்கள். அண்மைக் காலத்தில் 'Q' பிரிவிலிருந்து ஒரேயொரு Inspector-ரும், ஒரு தலைமைக் காவலரும்தான் மாற்றப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் யாரும் மாற்றப்படவில்லை.

இலட்சக்கணக்கான

அல்லது

இன்னொன்று, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் சிறையில் இருப்பதாகச் சொன்னார்கள். நான் அதைப்பற்றி வலியுறத்திக் கேட்டபோது, இவையெல்லாம் ஒரு உயர்வு நவிற்சி என்று சொன்னார்கள். உயர்வு நவிற்சி என்பது இல்லாத பெருமையை அதிகமாகச் சொல்வது; இல்லாத எண்ணிக்கையை அதிகமாகச் சொல்வது, மிகைப்படுத்துதல். அவர் பன்மொழிப் புலவர். அவருக்கு நான் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மிகைப்படுத்தி, அன்றைக்கு, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள், அப்பாவி இளைஞர்கள் சிறையில் இருப்பதாகச் சொன்னார்கள். அந்த எண்ணிக்கையை நீங்கள்தான் கொண்டு வரவேண்டுமென்று எனக்குச் சொன்னார்கள். நான்