588
காவல்துறை பற்றி
திருப்பிக் கேட்டபோது. கொண்டு வந்து இருக்கின்றேன். கட்டளையை ஏற்று. (சிரிப்பு).
தமிழகத்திலே உள்ள பத்து சிறைச்சாலைகளிலும் சேர்த்து 12-5-2000 அன்று சிறையிலே இருக்கின்ற மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 13,138. 12ஆம் தேதியோடு தமிழ்நாட்டு சிறையிலே, 10 சிறைக் கோட்டங்களிலே இருக்கின்றவர்களுடைய எண்ணிக்கை 13,138. இதில் இஸ்லாமியர்கள் 351 பேர்; இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் 12,787 பேர். இஸ்லாமியர்கள் 2.67 சதவிகிதம்; அல்லாதவர்கள் 97.33 சதவிகிதம் என்ற இந்த விவரத்தை நான் இங்கே தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).
விரைவான புலன் விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு அன்று பேசிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரால் எடுத்து வைக்கப்பட்டது. நம்முடைய சுந்தரம் அவர்களும் அதே கருத்தை இங்கே எடுத்துச் சொன்னார்கள். நத்தை வேகத்திலே காவல் துறை நடைபெறுவதாக அன்றைக்கு அவர்கள் கூறினார்கள். எந்த அளவுக்குத் தீவிரமாக, விரைவாக புலன் விசாரணை நடைபெற்று, குற்றப் பத்திரிகைகள் எல்லாம் கொடுக்கப்பட்டு, விசாரணையும் முடிவுற்று, தண்டனைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதற்குச் சில விவரங்களை இந்த அவைக்குத் தெரிவிப்பது என்னுடைய தலையாய கடமையாகும்.
கோயம்புத்தூரில் நடந்த வெடிகுண்டுச் சம்பவங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரமாக விசாரணை செய்து, 175 குற்றவாளிகளைக் கைது செய்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டு 5-5-1999 அன்று 180 பேருக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து திருச்சி, ஈரோடு, திருச்சூர் சென்ற ரயில்களில் 6-12-1997 அன்று குண்டு வெடித்து, 10 பேர் இறந்த சம்பவத்தைப் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழு, குற்றவாளிகள் ஒன்பது பேரை விரைந்து கைது செய்தது.
சென்னை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் 30-5-1999 அன்று குண்டு வைத்த குற்றவாளிகள் கைது செய்யப்