உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

திரு. பி.ஆர். சுந்தரம் :

605

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தமிழ் ஈழத்தை ஆதரித்து இங்கே போராட்டம் நடத்துவோம் என்று சொல்ல வில்லை. அந்தக் காலத்திலே ஜெயவர்தனாவுக்கு வராத கோபம் உங்களுக்கு ஏன் இன்று வருகிறது? சந்திரிகாவுக்கு வராத கோபம் உங்களுக்கு ஏன் இப்போது வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், நம்முடைய

ஞானசேகரன் அவர்களும் பேசும்போது நிதி நிறுவனங்களுடைய மோசடிகள் குறித்துப் பேசினார்கள். இந்த நிதி நிறுவனங்களுடைய மோசடிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான் என்பதை அறிவீர்கள். (மேசையைத் தட்டும் ஒலி). அதிலே ஒன்றிரண்டு நிகழ்வுகளில் சுணக்கம் இருந்திருக்கலாம்; அல்லது ஒன்றிரண்டு நிகழ்வுகளில் சில அதிகாரிகளால் தவறுகள் கூட ஏற்பட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் நம்முடைய செல்லக்குமார் அவர்கள்கூட அன்றைக்குச் சுட்டிக்காட்டினார்கள். அவையெல்லாம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அவை மறுபடியும் ஒழுங்குப் படுத்தப்பட்டன என்பதை அறிவீர்கள். ஆனால் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளினால் நிதி நிறுவனங்களுடைய மோசடிகள் மக்கள் மன்றத்திலே அம்பலமாக்கப்பட்டன. அதுவும் குறிப்பாக, இந்தியாவிற்கே வழிகாட்டியாக, 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிறுவன வைப்பீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இந்த அரசுதான் முதன்முதலாக இயற்றியது என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). அந்த மோசடி சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சென்னையிலே தனி நீதிமன்றம் ஒன்றை அமைத்தது. தனி நீதிமன்றம் என்றால் அந்த நீதிமனறம் அல்ல. இது வேறு. இந்த மோசடிக்காக, நிதி நிறுவனங்களுடைய மோசடிக்காக தனி நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். மோசடி நிதி நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க பொருளாதாரக் குற்றப்

மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.