உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




642

காவல்துறை பற்றி

விடுதலை செய்த அதே நாளில்தான் என் அருமை கண்மணி முரசொலி மாறன் இறந்த நாள். அந்த விடுதலை விழாவைக் கொண்டாட கோபாலபுரத்திலே என்னுடைய வீட்டைச் சுற்றி பட்டாசு வெடித்தார்கள். மாறன் அவர்களுடைய சாவு நடக்கும் பொழுதே, பட்டாசு வெடித்தார்கள். அதெல்லாம் வேறு விஷயம். அதெல்லாம் அரசியல் நாகரீகத்தினுடைய ஒரு அத்தியாயம். நான் அதற்காக கவலைப்படவில்லை.

நான் சொல்ல வருவது, 24-11-2003-ல் தீர்ப்பு. அந்த டான்சி நிலத்தை, அரசுக்குத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று, சொல்லப்பட்டு, 2003, 2004, 2005 முடிந்து, 2006-உம் வந்துவிட்டது. இதுவரையிலே, டான்சி நிலம் திரும்பவும் ஒப்படைக்கப்பட வில்லை. அதற்கு இப்போது புதிதாகச் சொல்லப்படுகின்ற காரணம், stamp-ஏ 3 கோடி ரூபாய்க்கு ஒட்டவேண்டுமாம். அதைத் திரும்ப ஒப்படைக்கவேண்டுமென்றால், வாங்கி விட்டார்கள், அரசாங்கத்திட மிருந்து; திரும்ப ஒப்படைப்பது என்றால், 3 கோடியே 15 இலட்சம் ரூபாய்க்கு stamp ஒட்டவேண்டும். அதை ஒட்டுவதா, இல்லையா என்று முடிவு எடுக்கவில்லை. File போனால்தான் வராதே! முடிவு எடுத்தால் தானே ஆகும்? ஆகவே, முடிவு எடுக்கவில்லை. இப்போது கடைசியாக நாங்கள் ஒத்துக்கொண்டிருக்கின்றோம். அரசாங்க நிலம் அரசாங்கத்திடம் இருந்தால்போதும்; அதற்காக 3 கோடி ரூபாய் stamp ஒட்டித் தொலைக்கிறோம் என்று (மேசையைத் தட்டும் ஒலி). சொல்லியாகிவிட்டது.

ம்

ஒன்றே ஒன்று, வீரப்பனைப் பிடித்ததை, பெரிய வீரப் பிரதாபமாகச் சொல்லப்படுகிறது. நான் இல்லையென்று சொல்லவில்லை. வீரப்பனைப் பிடித்தது ஒரு நிகழ்ச்சி; தேவையான நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு நானும் மகிழ்ச்சியடைந்தேன் என்பதை, பிடித்த விஜயகுமார் தெரிந்து வைத்திருக்கிறார். விடியற்காலையில் கொடைக்கானலில் உட்கார்ந்து நான் எழுதிக் கொண்டிருக்கின்றேன். எனக்கு telephone call வருகிறது, விஜயகுமார் அவர்களிடமிருந்து. அப்பொழுது அவர் அரசாங்கத்திலே வேலை பார்க்கவில்லை. நானும் அரசுப் பொறுப்பிலே இல்லை. நான் என்னவென்று கேட்டேன். “ஒன்றும் இல்லை Sir, வீரப்பனைப் பிடித்துவிட்டோம், சுட்டுவிட்டோம், கொன்றுவிட்டோம்" என்று சொன்னார்.