கலைஞர் கருணாநிதி எழுதியுள்ள கதைகள் பலவும் நிகழ்ச்சிச் சித்திரங்களாக அமைந்து, அவற்றைப் படிப்பவர்தம் உள்ளத்தைக் கரைத்து, நீதியை உணரச் செய்திடும் திறத்தன.
அந்த வரிசையில் இடம்பெறும் புகழ்பெற்ற திராவிடர் இயக்க எழுத்தாளர்களே - இந்தத் தொகுப்புக் கதைகளை வரைந்த ஆசிரியர்களான
திரு. இராம. அரங்கண்ணல்.
மறைந்த ஏ. வி. பி. ஆசைத்தம்பி
திரு. இளமைப்பித்தன்
திரு. இரா. இளஞ்சேரன்
திரு.கே. ஜி. இராதாமணாளன்
திரு.தில்லை. மறைமுதல்வன்
மறைந்த சிறுகதை மன்னர். எஸ். எஸ். தென்னரசு
மறைந்த தத்துவமேதை டி. கே. சீனிவாசன்
திரு.முரசொலி மாறன் (நாடாளுமன்ற உறுப்பினர்),
திரு. ப. புகழேந்திமுதலானோர், அவர்தம் எழுத்தாற்றல், கதைபுனையும் திறன், கதைக்கருவைத் தேடும் முறை, கதை மாந்தரும், களனும் அமைத்திடும் முறை, கதை மாந்தர்தம் உரையாடல் மூலம் தமது கொள்கையை இடம் பெறச் செய்யும் மதிநுட்பம் ஆகியவை அவரவர் உளப்பாங்கை
6