உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

சிறுகதைகள்



அய்யர் கெஞ்சினார். நாராயணியின் மௌனம் நீடித்தது. அய்யருக்குச் சிறிது நம்பிக்கை பிறந்தது. நாராயணி தனக்காகத் தன்னைத் தியாகம் செய்யத் தீர்மானித்து விட்டதாகக் கருதினார்.

“அவர் எங்கும் போய்விடவில்லை. அடுத்த அறையிலேதான் இருக்கிறார் - இப்போதே வரச் சொல்றேண்டி. மறுபடியும் அவரை விரட்டிடாதே!” என்று கூறியபடி கிருஷ்ணய்யர் வெளியே ஓடினார்.

நாராயணி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஏதோ ஒரு முடிவோடு எழுந்து நின்று நாயுடுவின் வரவை எதிர் நோக்கினாள். நாயுடுவும் ஆவலோடு உள்ளே நுழைந்தார். நாராயணி அவர் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள்

“வந்துவிட்டேன் நாராயணி! நான் எங்கும் போகவில்லை. பக்கத்து அறையிலேதான் இருந்தேன். நீ என் உறுதியைச் சோதிப்பதற்காகவே பிடிவாதம் செய்தாய் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்று பல்லை இளித்தபடி அவளது பக்கம் வந்து நின்றார் நாயுடு. அவர் பேசி முடிப்பதற்குள்ளாக நாராயணி அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு, “என்னை எப்போதும் வைத்து காப்பாற்றுவீர்களா?” என்று திடீரெனக் கேட்டுவிட்டுத் தேம்பி அழுதாள்.

இதுபோன்ற வார்த்தை அவளிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்காத நாயுடுவும் திடுக்கிட்டார்.

“உண்மையாகவே கேட்கிறேன். என்னை உங்களிடம் ஒப்படைத்தவனை இன்று முதல் புருஷன் என்கிற நிலையிலே வைத்து நான் பூஜிக்கப் போவதில்லை. இனி நீங்கள்தான் எனக்குக் கதி! நீங்கள் தான் எனக்குப் பதி!