உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

சிறுகதைகள்


கொடுத்து கணபதி ஆலயத்தைக் கட்டிமுடித்தார் அண்ணாமலை முதலியார்.

ஆண்டு நகர்ந்தது.

கருப்பாயி உயிர் வாழ்ந்தாள். ஒரு நாள் கருப்பாயி பண்ணையாரின் மாட்டுத்தொழுவத்தில் சாணம் எடுத்துக் கொண்டிருந்தாள். அண்ணாமலை முதலியார் “என்ன. வேலை முடிந்ததா?” என்று கேட்டுக்கொண்டே நுழைந்தார். முதலியாரின் என்றுமில்லாத பிரவேசம் கண்ட கருப்பாயி திடுக்கிட்டாள். முதலியாரின் காமவெறி தலை விரித்தாடியது. பாவம்! கருப்பாயி பலி ஆனாள்!

நாட்கள் உருண்டோடின. கருப்பாயி கசந்த வாழ்வில் கற்கண்டின் சுவையைக் கண்டாள். எஜமானின் தயவு யாருக்குக் கிடைக்கும்? கருப்பாயி கர்ப்பவதி. வெளியே தலைநீட்ட வெட்கம். ஊரிலிருந்தால் தலையை வெட்டிவிடுவேன் என்று முதலியார் இறுதி எச்சரிக்கை விடுத்தார். அவசரச்சட்டம்; அந்த அபலைப் பறைச்சியால் அதைத் தாங்க முடியுமா? எஜமான் உத்தரவல்லவா? கருப்பாயி தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டாள்.

மாட்டுத் தொழுவத்திலே ஆவலாக நுழைந்த அதே முதலியார், “எங்காவது காட்டுப்பக்கம் ஓடிவிடு!” என்று தன் ‘காதலி’க்குக் கட்டளையிட்டார். முதலாளியின் கருணை, ஜாதிபேதம் பாராட்டாத பரந்த மனப்பான்மை. ஏழையிடம் அன்புகாட்டும் பொதுவுடைமைத் தத்துவம் இவைகளை நினைத்து மகிழ்ந்ததோடல்லாமல் தன் கட்டுமஸ்தான தேகத்தின் அழகு பற்றியும் இறுமாந்திருந்தாள். இழந்த வாழ்க்கையை முதலியாரின் தயவால் ஓரளவு செப்பனிட்டுத் தன் குழந்தையையாவது வளர்க்கலாம் என்று கனவுகண்ட கருப்பாயி, கடைசியில் தேச சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தாள். தேசசஞ்சாரத்தின் முடிவு? வினைதீர்த்தவூர் தர்ம ஆஸ்பத்திரியின் வாசற்படியில், வேதனையோடு நிற்கிறாள்.