104
சிறுகதைகள்
“இரண்டு ஆத்மா...... இன்னைக்குக் கங்காதேவி ஆட்கொண்டாள்” -ஒரு ஆத்ம ஞானியின் சொற்பொழிவு இது.
குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட கருப்பாயியின் பிரேதம் கரைக்குக் கொண்டுவரப்பட்டது. போலீசார் பிரேதத்தைப் பார்வையிட்டனர். பிரேத விசாரணைக்கு ஏற்பாடாயிற்று. எந்த ஆஸ்பத்திரியில் பறைச்சிக்கு இடமில்லையென்று முதல் நாளிரவு விரட்டியடித்தார்களோ, அதே ஆஸ்பத்திரியில் அந்தப் பறைச்சியின் பிரேதம் தாராளமாக அனுமதிக்கப்பட்டது. பிச்சுமூர்த்தி பிரேத விசாரணைக்கு உதவியாகத் தன் வேலையைத் தொடங்கினார். அவருக்கும் அவருடைய கம்பவுண்டருக்கும் கருப்பாயி இறந்த காரணம்?...
ஊர் கூறிற்று கடவுளின் திருவிளையாடல் என்று. டாக்டர் நடித்தார் காரணம் கண்டுபிடிப்பதாக.
உலகத்துக்குத் தெரியுமா, சமுதாய அமைப்பிலே நாட்டு நடப்பிலே உள்ள கோளாறு நஞ்சாக மாறிக் கருப்பாயியைக் கொன்றுவிட்டது என்ற உண்மை?
யாருக்குத் தெரியும்?அது தெரிந்தால்தானே பிரேத விசாரணையில் வெற்றியடைந்ததாக அர்த்தம்!
☐