- புதையல் - 207 யிலே வந்த குமாரவடிவு உன்னையும், உன் தங்கையையும் தேடித்தேடி அலைந்தான். கொலைகார னுக்கு யார் சரியான பதில் சொல்லப்போகிறார்கள்! சிறைச்சாலையிலே பித்தனைப் போல் அலைந்து கொண்டு, சிறை அதிகாரிகளிட்ட வேலை களைச் செய்து கொண்டு, ஓய்வு நேரம் முழுவதையும் உங்க ளைப்பற்றி நினைப்பதிலேயே செலவிட்டுக் கொண்டிருந்த குமாரவடிவுக்கு-நீங்கள் போன இடம் தெரியவில்லை என் றால் எப்படியிருக்கும்! தான் பெற்ற செல்வங்களைக் கண்டு களிக்கலாம்; வளர்ந்திருப்பார்கள் வனப்பு மிகுந்தவளா யிருப்பாள் தங்கம் வாலிபக் காளையாகத் திகழ்வான் மகன் வாரியணைத்து மகிழலாம் என்று இன்பக் கனவு கள் பல கண்டிருப்பானே அவன் அந்தக் கனவுகள் எல்லாம் அவனது விடுதலையால் கலைந்து விட்டன என்கிறபோது எவ்வளவு வேதனைப் பட்டிருப்பான் அவன்? சிறையிலே எத்தனையோ வகைக் கைதிகள் இருப்பார்கள். பெரும்பாலும் மனைவியைக் கொலை செய்த வர்களின் கணக்கு அதிகமாகவேயிருந்தது, குமாரவடிவு இருந்த சிறைச் சாலையிலே! கூடிப் பேசும் நேரங்களிலே அவர்கள் தங்களது சிறை புகு படலத்தைப் பற்றிய கதை களை அவிழ்த்து விடாமல் இருக்க மாட்டார்கள். - 1 -- " சோர புருஷனோடு கூடிக் கிடந்தாள். சொரணையுள்ள வன் அதை அனுமதிக்க முடியுமா? தீர்த்துக் கட்டிவிட் டேன்; தீட்டிய அறிவாளால்!" என்று வீராப்பு பேசு வான் ஒரு கைதி! - "தாயார் வீட்டிலேயேதான் இருப்பேன். உனக்கு தாகமாக இருந்தால், இங்கு வந்துபோ என்று சட்டம் பேசினாள் - தாலி கட்டியவனுக்குப் பொறுக்குமா? தரை யோடு தலையை மோதி மோதிக் கொன்றேன்" என்று ஆத் திரத்தோடு கூறுவான், இன்னொரு கைதி,
பக்கம்:புதையல்.pdf/209
Appearance