210 மு. கருணாநிதி சிறிய சிறையிலேயிருந்து, உலகமென்னும் பெரிய சிறைக்கு வந்த குமாரவடிவு, இலங்கைத் தீவிலே சில நாள் அலைந்தான். பிறகு, இந்தியாவுக்கு வந்து சேர்ந்தான். மகனும், மகளும் இனி அகப்பட மாட்டார்கள் என்ற தீர் மானத்துக்கு அவனே வரும் வரையில் அவர்களைத்தேடித் திரிந்தான். தமிழகத்து மண்ணை, குமாரவடிவு தனது கண்ணீரால் நனைக்கும் போதெல்லாம் நீ நாடகமாடிக் கொண்டிருப்பதும் துயில் கொண்டிருப்பதும், அவனுக்குத் தெரியாது. படித் தெரிய முடியும்? தெரிந்துகொள்ளும் வாய்ப்பு தான் ஏது? 1 - த இதே மண்ணில் உன் தங்கை நீண்ட எப் குடும்பப் புத்தகத்தை செல்லரித்துவிட்டது - ஒரே ஒரு ஏடு குமாரவடிவு குமாரவடிவு மட்டுமே காலக் காற்றிலே புழுதி யோடு சேர்ந்து பறந்து கொண்டிருக்கிறான் தனக்குத் தானே அவன் சொல்லிக் கொள்வான். அப்படிப் பறந்து கொண்டிருந்தவன் 1 1 என்று கிராமம் தோறும் பயணம் நடத்தி, புதிய தத்துவங்களை உபதேசம் செய்யும் ஞானியாக மாறினான் ஆமாம், ஞானியென்று அவன் தன்னை எண்ணிக் கொண்டான்; யாரோ ஒரு பைத் தியக்கார வேதாந்தி என்று ஊரார் அவனைப் பரிகாசம் செய்தனர். அவன் அதற்காகக் கவலைப்படவில்லை. தான் கண்டுபிடித்ததாகக் கருதும் கருத்துக்களை, யாரிடமாவது சொல்லித் தீரவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். அவனது உபதேசங்களை மக்கள் காது கொடுத்துக் கேட்ட தற்குக் காரணமே வேறு! அவன் வைத்தியத்தொழிலிலே நிபுணன் என்று பெயர் வாங்கிவிட்டான். தேயிலை இலை களைப் பறித்த குமாரவடிவு இப்போது மூலிகைகளைப் பறிக் கும் சித்த வைத்தியராக மாறினான். இந்தத் திறமையை அவன் சிறையிலே பெற்றான். மருத்துவத்திலே மகா நிபுணன் ஒரு கைதி - அவனிடம்
பக்கம்:புதையல்.pdf/212
Appearance