புதையல் என்பது கிழங்கைத்தானய்யா; 209 என்று குமாரவடிவு உரக்க உரக்கச் சொல்லியும் கைதிகள் கேட்டார்களில்லை. “ சும்மா - - மனைவியை அல்ல - - புளுகாதே " என்று கிண் டல் செய்து-அவன் நெஞ்சைத் துளைத்தார்கள். இதெல் லாம் சில மா தங்கள் தான்! - பிறகு குமாரவடிவு சாதாரண கைதி நிலையிலேயிருந்து மேஸ்திரி கைதியாக உயர்த்தப் பட்டான். அதன் பிறகு கைதி வார்டர் பதவியையும் ஏற்றுக் கொண்டான். கைதி வார்டர் என்றால் சிறைக்குள்ளேயே கொஞ்சம் கௌரவமான உத்தியோகம். அந்த உத்தியோ கத்திற்கு சம்பளமே தண்டனை நாள் குறைப்புத்தான்! ஆனால் அதிகமாகத் தூங்க முடியாது. நினைத்த சமயம் - படுக்க முடியாது. இரவு பகல் எல்லா நேரத்திலும் வேலை யிருக்கும். அந்த வேலையில் சிறு தடங்கலும் ஏற்படக் கூடாது. கஷ்டப் படுவதற்கேற்ற பயனிருக்கிறது. அது தான் நாட் குறைப்பு என்றேனே; அது! - உலகத்தின் எங்கேயோ ஒரு மூலையிலே - குறிப்பிட்ட அளவு மட்டும் நடக்கலாம்; அந்த வேலியைத் தாண்ட முயன்றால் வேதனைக்காளாக நேரிடும் - என்ற உத்திர வுக்குப் பணிந்து நடைப்பிணம் போல வாழ்க்கையை நகர்த் தும் எண்ணற்ற மனிதர்கள் - அந்தப் பயங்கர நாட்களிலே ஒரு நாள் குறைந்தாலும் அதை மகிழ்ச்சியோடு தானே வர வேற்பார்கள்! அப்படித்தான் குமாரவடிவு நாட்களை எண் ணிக்கொண்டு வந்தான். விடுதலை பெற்ற பிறகுதான் அவனுக்குத் தோன்றியது, சிறையிலேயே ஆயுள் முழுவ தையும் ஓட்டியிருக்கலாமே என்ற எண்ணம்! இனி என் செய்வது? வரமாட்டேன் என்றாலும் விடமாட்டார்கள் ஒரு நாள் இருந்துவிட்டுப் போகிறேன் என்றாலும் அனு மதிக்க மாட்டார்கள் - அப்படிப்பட்ட இடமல்லவா சிறைச் சாலை! - -
பக்கம்:புதையல்.pdf/211
Appearance