கங்கையின் காதல்
எ
கும் துடிப்பு--இவற்றையெல்லாம் உண்டாக்கி விட்டு அவளை விபசாரி என்றால் யார் கேட்பது... ? நீ குருபத்தினியைக் கூடியது பாபமாம். பைத்தியக் காரரின் உளறல். குருவுக்குச் செய்யவேண்டிய தொண்டு; அவர் மனைவியின் கவலையைப் போக்கினானே அது பெரிய தொண்டல்லவா?"
டு
"நான் தான் என்ன செய்துவிட்டேன் !" ஆகாயத்திலிருந்த என்னைப் பகீரதன் கூப்பிட் டான். பகீரதனுடைய அழகைக் கண்டு என்மேனி குலுங்கிற்று, மேனி மட்டுமா? இதயமே குலுங் கிற்று. அந்தக் காமதாகத்தை வர்ணிக்க என்னால் முடியாது சந்திரா.. !கம்பன் பிறந்துவரவேண்டும்; அவ்வளவு எல்லை மீறிவிட்டது என் உணர்ச்சி. ஒரு நாட்டு மன்னன்; சகலபோக போக்கியமுமுள்ள சக்ரவர்த்தி; அவனோடு சரச சல்லாபமாடி. ஜென்ம சாபல்ய மடையலாம் என்று கனவு கண்டேன். ஆனால் அந்தக் கையாலாகாதவன் .... என்னை இந்தக் கைலாசக் கிழவனிடம் தள்ளிவிட்டான். இவனோ கிழவன்.. கிழவன் மட்டுமா.... தாருகா வனத்து ரிஷி களின் மனைவிகளுக்காக....... உடலையே தேய்த்து விட்ட எலும்புக்கூடு. அதுமட்டுமா சந்திரா...! பக்கத்திலே பார்வதி, இன்பக் கேளிக்கைக்குக் கால அட்டவணை. ஒருத்திக்கு ஒரு நாள் ஒரு நாள் முறை. என்னால் முடியுமா?.... என்போன்ற யுவதிகளால் முடியுமா?...ஏன்...பார்வதியால்தான் முடிந்ததா?... பிரமாவை யல்லவா கேட்கவேண்டும் அந்தக்
கதையை
39
56