இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தனித் தமிழ் தமிழில் பிறமொழிப் பதங்கள் கல வாமல் தமிழ் தனியாக வழங்கப்பட வேண்டும் என்று பல நல்ல படிப்பாளி களும் விரும்புகிறார்கள். அந்த விருப் பத்தில் தவறில்லை. ஆனால் அந்த விருப் பத்தை அடைவது முடியாத காரியம் என்பதையும், அந்த அசாத்திய காரியம். முடியாதிருப்பதற்காக அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மேல் சுமத்து கின்ற பழிகளும் அநியாயம். இதனால் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்க ளுக்குள் வளர்ந்து வரும் அன்பின்மை யும் அதிகம். தனித் தமிழ் என்ற ஒரு தமிழ் எப் போது இருந்ததோ, எங்கிருந்ததோ அறிய முடிய வில்லை. திருவள்ளுவர் காலத்துக்கு முன் வடமொழி கலவாத தமிழ் இருந்ததை