உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். கூஎ தல். பின்னையது பிறிதானுணர்தற்பாலதாதல். அனுமானத்தாற் கவரற்பாலதாகலான் துணிந்ததனைத் துணிதலென்னுங் குற்றம் வாராமல் நீக்குதற்பொருட்டு "எல்லாம் என்றும், இவ்வுணர்வு மெய்யனுபவமன்றென்னும் ஞானத்தாற் பிரமாணமாதல் கவரப் படாமையின் ஆண்டுமறுப்புவாராமை நீக்குதற்குப் 'பிரமாணமாத வின்மையைக் கவராது என்றும், இவ்வுணர்வு மெய்யனுபமன் றெனப் பின்னிகழுமுணர்வு பிரமாணமாதலைக் கவருங் கருவிக்குப் பிரமாணமாதலின்மையைக் கவராமையின்மையால் தன்னாலாதல் இன்றாய்முடியும், அதனை நீக்குதற்கு 'அது' என்றும், கூறியவாறு. அது பிரமாணமாதலின்மையைக் கவராதென்றது பிரமாணமாதற் குச் சார்பாயுள்ளது பிரமாணமாதலின்மையைக் கவராதென்ற வாறு. எடுத்துக்காட்டிய உதாரணத்தின்கண் முந்திய முயற்சியிற் பிரமாணமாதலின்மையைக் கவர்வது பின்முயற்சியின் அதனைக் கவராமையின், தன்னாலாதல் பெறப்படும். அற்றேல், 'குடத்தை யான் காண்கின்றேன்' என்னும் பின்னிகழ்ச்சிக்குக் குடமும் குடத்தன்மையும்போல அவற்றின் சம்பந்தமும் விடயமாகளின் முயற்சி வடிவாகிய சம்பந்தம் ஒப்ப நிகழ்தலின் முன்னர்த்தோன் றும் உருவின் விசேடணத்தின் சம்பந்தமே மெய்யனுபவத்தன்மை யாகிய பதார்த்தமாகலிற் பிரமாணமாதல் தன்னாலே உணரப்படு மாலோவெனின்;- அற்றன்று, பிரமாணமாதல் தன்னாலுணர்தற் பாலதாயின் புனலுணர்வுதோன்றியது மெய்யோ அன்றோவெனப் பயிலாதகாலத்து மெய்யனுபவத்தன்மைக்கண் ஐயப்பாடின்றாதல் வேண்டும், பிரமாணமாதல் பின் முயற்சியாற்றெளியப்படுதலான். முன்னர் ஐயப்பாடுண்மை பெறப்படுதலின், தன்னாலுணர் தற்பால தாதலின்மையால் பிறிதாலுணர்தற்பாலதேயாம்: அங்ஙனமன்றோ, முதற்கட்புனலுணர்வு தோன்றியபின்னர் முயன்று சென்றுழிப் புனல் கிடைத்ததாயின், முன்னர்த் தோன்றிய புனலுணர்வு மெய் t 7 +