உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

சிற்பியின் நரகம் 43 பெரிய அலைகள் சமயா சமயங்களில் அவனது பின்னிய தோல்வார்ப் பாதரட்சையை நனைத்தன. அவ்வளவிற்கும் அவன் தேகக்தில் சிறிதாவது சலனம் கிடையாது. மனம் ஒன்றில் லயித்துவிட்டால், காற்றுத்தான் என்ன செய்ய முடியும், அலைதான் என்ன செய்யமுடியும்? பைலார்க்களின் சிந்தனை சில சமயம் அலைகளைப் போல் குவிந்து விழுந்து சிதறின. கனவுகள் அவனை வெறியனைப்போல் விழிக்கச் செய்தன. திடீரென்று, சிவா?" என்ற குரல். ஒரு தமிழ்ப் பரதேசி! "யவனரே! உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ்வெளியில் லயித்ததோ? நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா?எல்லாம் மூலசக்தியின் திருவிளையாடல், அதன் உருவம்! கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான்! எல்லாம் ஒன்றில் லயித்தால்......?" "உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்சைமது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப் பிரஸ் தீவின் திராட்சை...அதோ போகிறானே, அந்தக் காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை ஒப்புக்கொண்டால் உமது கட்டுக்கோப்பில் தவறு கிடையாதுதான்... அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஒவ்வொருவனுடைய பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்..... எனக்கு அது வேண்டாம்..... நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும், மதுக் கிண்ணமும் போதும்..." மனப் சிவசிவ!இந்த ஜைனப் பிசாசுகள்கூடத் தேவலை, கபாலி வெறியர்கள்கூடத் தேவலை... உம்மை யார் இந்த அசட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது? உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால்தான் அர்த்தமுண்டு. எங்கள் ஜூபிட்டரின் குறிப்பிடப்படும் -

  • ஜூபிட்டர் யவன இதிகாசங்களில்

தேவர்களுக்கு அரசன் - கிரகங்களில் வியாழம். -