உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

கலியாணி 69 பாளோ.அவளை மறுபடியும் எப்படிப் பார்ப்பது என்பதே யோசனை. அன்று இரவு முழுவதும் காட்டிலேயே இருந்து விட்டார். அப்பொழுதும் சாந்தி பிறக்கவில்லை.அதிகாலை யில் சென்று சாமானை எடுத்துக்கொண்டு, ஊரை விட்டே போய்விடுவது என்று நினைத்துக்கொண்டு திரும்பினார். கொழுந்து மாமலை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்தது. ஊருக்கு வரவேண்டுமானால் ஆற்றைக் கடந்துதான் வர வேண்டும். மணி மூன்று இருக்கும்பொழுது ஆற்றங் கரையை யடைந்தார். மனத்தில் சாந்தி பிறக்கவில்லை. உள்ளம் பேய் போலச் சாடியது. இன்னும் நன்றாக விடியவில்லை. ஆற்றில் யாரோ துணி துவைப்பதுபோலச் சப்தம். இவ்வளவு அதிகாலை யில் அங்கு யார் வர முடியும்? யாரது? என்றார். 66 'யாரது?' என்ற பதில் கேள்வி பிறந்தது. குனிந்து துவைத்துக்கொண்டிருந்த உருவம் நின்றது. ஒரு பெண் - கலியாணி! "கலியாணி! நீயா இங்கு!... இந்த நேரத்தில்! பயப் படாதே! நான்தான் சர்மா?" "நீங்களா!" அவள் சொல்லி முடியுமுன் சர்மா அவளை அப்படியே தழுவிக்கொண்டார். அவள் விலக முயன்றாள். இருவரும் தடுமாறிப் பாதி ஜலத்திலும் பாதி மணலிலும் விழுந்தனர். கலியாணியின் முகத்திலும் அதரத்திலும் மாறி மாறி முத்தமிட்டார். கவியாணி தடுக்கவில்லை. அவருடைய போக்கிற்கெல்லாம் தடை செய்யவில்லை. சற்று நேரம் கழிந்தது. கலியாணி! "OT GUT GOT?" "என்னுடன் வந்துவிடு! இந்த மனித நாற்றமே அற்ற விடத்திற்குச் சென்றுவிடுவோம்!" 5