உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62 புதுமைப்பித்தன் கதைகள் போதையில் அவளுக்குக் கண்கிறங்கியது. தூங்கி விட்டாள். நடைமுறை உலகத்தில் இல்லாவிட்டாலும், கனவு உலகத்திலாவது, கணவன் சிரித்த முகத்துடன் பேசிக்கொண் டிருப்பதுபோல் ன்று அவளுக்குத் தோன்றியது. காலையில் கலியாணி எழுந்திருக்கும்பொழுது என் றும் இல்லாதபடி வெகு நேரமாகிவிட்டது. எழுந்ததும் குடத்தை எடுத்துக்கொண்டு நேராகக் குளக்கரைக்குச் சென்றாள். V அன்று இரவு முழுவதும் சுந்தர சர்மாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை என்றால் வியப்பில்லை. இத்தனை நாட்களும் தமது மனத் திரையை விலக்கி அவளைப் பார்க்காததற்கு ஆச்சரியப்பட்டார். அந்த ஆச்சரியம் அவரை எங கெங்கோ இழுத்துக்கொண்டு சென்றது. அவரோ, சைத்ரிகர் - அழகுத் தெய்வத்தின் அடிமை! கலியாணி யின் சோகம் தேங்கிய கண்கள் அவருக்குக் கற்பனைக் கதையாக காவியமாகத் தெரிந்தது. அன்று இரவு முழு வதும் உள்ளம் கட்டுக்கடங்காமல் கொந்தளித்தது. சுப்புவையர் பாவம், அது ஒரு பிரகிருதி. அவர் வசம் கலியாணி பிணிக்கப்பட்டால், விதியின் அற்பத்தனமான லீலைகளை உடைத்தெறிய ஏன் மனம் வராது? அவரை மனிதனாகவே சர்மா நினைக்கவில்லை. அவரது சிறையி லிருந்து அவளை விடுவிக்க வேண்டும் என்று அவர் நினைத் தார். அதில் கலியாணியின் சம்மதம், - அதைப்பற்றிக்கூட அவருக்கு அதிகக் கவலையில்லை. அவளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டால் ..... வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருக்கும்! இலட்சியத்திற்கு அவள் எவ்வளவு பெரும் ஊக்கமாக இருப்பாள்.மனிதப் புழுக்களே இல்லாத. மனிதக் கட்டுப் பாடற்ற, மனித நாகரிகம் என்ற துர்நாற்றம் வீசாத கானகத்தில், வாழ்க்கையையே ஓர் இன்பப் பெருங் கன வாகக் கழித்தால் என்ன?