உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

46 ஒரு நாள் கழிந்தது 83 இந்தாருங்க ஸார்!" என்று மற்றடம்ளரையும் நீட்டி னார் முருகதாசர். "வேண்டாம்! வேண்டாம்! இதுவே போதும்!" என் றார் சுப்பிரமணிய பிள்ளை. "நான்சென்ஸ்!" என்று சொல்லிவிட்டு, குழந்தை எச்சிற்படுத்தியதைத் தாம் வாங்கிக்கொண்டார் தாசர். " "நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!" என்று எழுந்தார் சுந்தரம். "அதற்குள் ளாகவா? வெற்றிலை போட்டுக்கொண்டு போகலாம்/" என்றார் முருகதாசர். கையில் எடுத்துக்கொண்டேன். நேரமாகிறது? அப் புறம் பார்க்கிறேன்!" என்று சொல்லிக்கொண்டு வெளி யேறினார் சுந்தரம். கையில் இருந்த புகையிலையை வாயில் ஒதுக்கிவிட்டு. சிறிது சிரமத்துடன், தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை. . தொண்டையைச் சிறிது கனைத்துக்கொண்டு, "சுப்ர மண்யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ச் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!" என்றார் முருகதாசர். 'ஏது அவசரம்" "சம்பளம் போடலே ; இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது.... திங்கட்கிழமை கொடுத்து விடு கிறேன்!" அதற்கென்ன...?" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என் கையில் இதுதான் இருக்கிறது!" இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம். "இது போதாதே!" என்று சொல்லி. அதையும் வாங்கி வைத்துக்கொண்டார் முருகதாசர். "அப்பொ..." என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார். பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக் கிறது," என்று சுப்பிரமணியமும் விடைபெற்றுச் சென் றார்.