உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100 புதுமைப்பித்தன் கதைகள் உரிமை. எங்கள் ஜீவனுள்ள மட்டிலும் அதற்காகப் போராடுவோம்!" என்று கொஞ்சம் ஆவேசத்துடன், தலையை ஆட்டிப் பேசியது. அந்த வேதாளம். அது தலையை ஆட்டிய வேகத்தில் அதன் கோரப் பற்கள் இரண்டும் கீழே விழுந்துவிட்டன. வேதாளம், அவற்றை உடனே எடுத்துச் சுனைத் தண்ணீரில் கழுவி விட்டு, மறுபடியும் ஈற்றில் ஒட்ட வைத்துக்கொண்டது. இதைக் கண்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. களுக்கென்று சிரித்துவிட்டேன். ஏதேது! என்னைக் கண்டால் உமக்குப் பயம் தட்ட வில்லையா? ஜாக்கிரதை! மனிதர் எல்லாரும் என்னைக் கண்டால் பயப்பட வேண்டும் என்பது சம்பிரதாயம்!- நீர் மனிதர்தானே என்று கேட்டது. இந்த வேதாளத்தின் விசித்திர சந்தேகங்கள், அதன் மீது எனக்கு அனுதாபத்தை உண்டுபண்ணின. உமக்கு நான் மனிதனா அல்லவா என்றுகூட ஏன் தெரியவில்லை? நான் மனிதன்தான்!" என்று சொன்னேன். ப. எனக்குப் பார்வை கொஞ்சம் மங்கல். அதனால்தான். பார்வை மங்கக் காரணம் என்ன தெரியுமா? நான் பிறந் ததே திரேதா யுகம்!" என்று தனது வயதை அறிவித்து விட்டு. அதெல்லாம் அந்தக் காலத்திலே!- இந்தக் காலத்து மனுஷனுக்குத்தான் பயப்படக்கூடப் புத்தியும் இல்லை, திராணியும் இல்லையே!" என்று மனித வர்க்கத்தின் தற்போதைய பலவீனத்தைப் பற்றித் தன் அபிப்பிரா யத்தை எடுத்துக் காட்டியது. அட பாபமே!" என்று, நான் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டேன். அந்தப் பாபத்தாலேதான்,ஐயா,நான் சைவனானது அந்தக் காலத்து மனுஷன் என்றால், எங்கள் ஜாதியைக் கண்டு பயப்படுவான், ரத்தத்தைக் கக்குவான்! இப்போது