உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

வேதாளம் சொன்ன கதை 101 தான் உங்களுக்குக் கக்குவதற்குக்கூட ரத்தம் இல்லையே! அதனாலேதான்,அதோ இருக்கு பாரும். தேன் கூடு!- அதிலிருக்கும் தேனைச் சாப்பிட்டுக்கொண்டு, சென்ற ஒரு நூறு வருஷமாக ஜீவித்து வருகிறேன்! "தினை மாவும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளக் கூடாதோ? உடம்புக்கு நல்லதாச்சே!" என்றேன். "இந்தக் காலத்திலே அது எங்கய்யா கிடைக்கிறது? முந்திக் காலத்திலேன்னா எல்லாரும் பயப்பட்டா, நாங்க நினைக்கிறதெ குடுத்தா. இந்தக் காலத்திலே. எதுக்கெடுத் தாலும் துட்டு இல்லாமல் காரியம் நடக்கமாட்டேன் என் கிறதே!" என்றது. "நீர் பூர்வ ஜன்மத்தில்..." "பூர்வாசிரமத்தில் என்று சொல்லுங்காணும்!" என்று இரைந்துகொண்டு என்னை அடிக்க வேகமாகக் கையை ஓங்கியது. திடீரென்று ஓங்கியதால் அதன் கை 'மளுக்' என்ற சப்தத்துடன் களுக்கிக்கொண்டது. இந்தக் கிழ வேதா ளத்தின் மீது நிஜமாகவே எனக்கு அன்பு தோன்றவும், அதன் கையைப் பிடித்து உதறிச் சுளுக்கைத் தடவி விட்டுக்கொண்டே, "வயசு காலத்திலே இப்படி உடம்பை அலட்டிக்கொள்ளலாமா? நீர் பூர்வாசிரமத்தில் பிராமணன் தானே! அப்படியானால் தர்ப்பணம். சிரார்த்தம் செய்து வைத்துப் பிழைக்கலாமே!" என்று ஆலேரசனை சொன் னேன். "நீர் சொல்லுகிறதும் நல்ல யோசனை தான்; ஆனால் எனக்கு வாதமாச்சே! குளிர்ந்த ஜலத்தில் குளித்தால் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாதே! என்ன செய்யலாம்?"

  • 4

அப்படியானால் உடம்புக்கு ஏதாவது டானிக் வாங்கிச் சாப்பிட வேண்டும். உங்கள் வேதாள உலகத்தில் வைத்தி யர்கள் கிடையாதா?" எங்களுக்குத்தான் சாவே கிடையாது என்று பிரம்மா எழுதி வைத்துவிட்டானே! அதனாலேதான் சாஸ்திரத்தை நாங்கள் கற்றுக்கொள்ளவில்லை" 7 வைத்திய