உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

வேதாளம் சொன்ன கதை 103 கூட எத்தனை தரம் பயங்காட்டி யிருக்கேன் தெரியுமா? அந்தக் காலத்திலேதான் எங்களுக்கு முதல்லே பிடிச்சது வினை. எங்கேயோ வடக்கே இருந்து சமணன் என்றும், புத்தன் என்றும் கூட்டம் கூட்டமாக வந்தாள். அந்த முட்டாள் பயல்கள், 'கொல்லப்படாது! பாவம் கீவம்' என்று சொல்லி ஆட்களைத் தங்கள் கட்சிக்குத் திருப்பி விட்டார்கள். அந்தக் காலத்திலேயிருந்துதான். நம்ம பரமசிவன் முதற்கொண்டு எல்லாத் தேவாளும் சைவராகி விட்டார்கள். காலம் அவாளை அப்படி ஆட்டி வைத்தது. முன்னே திரிபுரத்தை எரித்தாரே, இந்தச் சிவன், இப்பொ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக்கூட எரிக்க முடி யாது?" என்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு சிறு முயல், அதன் காலில் இடறிப்பாய்ந்து, பக்கத்துப் புதரைப் பார்த்துத் தாவியது. 'ஐயோ!" என்று கூவிக்கொண்டு, வேதாளம் வந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டது. ஓடியது ஒரு முயல்தான் என்று சொல்லி, அதன் பயத்தைத் தெளிவித்தேன். "நாங்கள் தலை கீழாகத் தொங்கித் தொங்கிக் கால் களெல்லாம் பிரயோஜனமில்லாமல் போய்விட்டன. இந்தத் தலைகீழ் ராஜ்யம் வந்ததும் அந்தச் சமணர்கள் காலத்தில் தான்!" என்றது. "எப்படி?" என்றேன். அவர்கள் எல்லாம் மரத்திலே உரியைக் கட்டி அதிலே உட்கார்ந்துகொண்டார்கள். ஜனங்க ளெல்லாரும் அந்தப் பக்கம் திரும்ப ஆரம்பிச்சா? நான்தான் அப்போ அதற்கு இந்த வழி பண்ணி, மறுபடியும் எங்களைப் பார்த்துப் பயப்படும்படி செஞ்சேன்! என்று கொஞ்சம் பெருமையடித்துக்கொண்டது. அது பேசிப் பேசி அதற்குள் பழைய பாபநாசத்திற்கு வந்துவிட்டோம்.