உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

134 புதுமைப்பித்தன் கதைகள் புதிதாக வந்தவன் மலைத்துப் போகலாம். உற்சாகப் பட முடியாது. வெளிச்சம்! வெளிச்சம்! வெளிச்சம்! கண்ணைப் பறிக்கும் இதுதான்... தெரு மூலை! இதுதான் மனித நதியின் சுழிப்பு இதற்கு உபநதிகள் போல் பெரிய கட்டடங்களுக் கிடையே ஒண்டி ஒடுங்கிப் போகும் ரஸ்தாக்கள். இது வேறு உலகம்! ஒற்றைப் பாதையில் பாதசாரிகள்: மங்கிய மின்சார விளக்குகள்! இடையிடையே எங்கிருந்தோ வரும் எக்களிப்புச் சிரிப்பைப்போல் டிராமின் கணகணப்பு. மணி எட்டுத்தானே சொன்னேன்? கொஞ்ச நேரம் சென்றுவிட்டால், ஆட்கள் நடமாட்ட மிருக்காது. 'ஆசாமிகள்' வருவார்கள். வாடிக்கைக்குக் கிராக்கி உண்டு. அல்லது இந்தப் பக்கங்களுக்கு அதற்குமேல் வரவேண்டு மென்றால், ஆசாமி'யாக இருக்கவேண்டும்; குருடனாக இருக்கவேண்டும்; அல்லது கண்கள் எல்லா வற்றையும் பார்ப்பதற்குத்தான் என்ற இரும்புத்தத்துவம் கொண்ட மனிதனாக இருக்கவேண்டும். அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங்களா? நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட்டு, உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி!- எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்கவேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக நாஸுக்காகக் கண்ணை மூட வேண்டாம். எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான். வீட்டில் இவ்வளவு 'சீப்பாக'க் காரியம் நடத்த முடி யாது. ஆனால், உங்களிடம் தத்துவம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை.