உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

138 புதுமைப்பித்தன் கதைகள் தேவரவர்களுக்கு இந்தக் குழந்தை என்றால் உயிர், கண்ணுக்குக் கண். பலசாலிகள் தங்கள் ஆசைகளை எல்லாம் பலவீனர்களின்மீது சுமத்துவது - தங்கள் வெறுப்பைச் சுமத்துவது போலவே- இயற்கை இயற்கை, விதியையும் கடக்கவேண்டியதாயிற்று. அந்த தான் பத்து வருஷங்களாகத் ராகத் தலைமைக்காரத் தேவரின் பூஜைகளும், நோன்புகளும் குழந்தைக்கு 'அப்பா' 'அம்மா' என்ற இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்படி செய்ய முடிந்தன. ஓட்டை வாளியை வைத்துத் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறவனுக்கு, பானையில் ஒரு சிரங்கை தண்ணீர் ஊற்ற முடிந்துவிட்டால் ஏற்படும் நம்பிக்கைக்கும் குதூகலத்திற்கும் எல்லையே இராது தேவ ரவர்களுக்கு, தமது ஊமைப்பிள்ளையும் சகலகலா பண்டித னாகி,நாட்டாண்மையைக் கம்பீரமாக வகிப்பான் என்ற அசட்டு நம்பிக்கையும் பிறந்தது. குழந்தை 'அப்பா' 'அம்மா' என்று சொல்லும் சமயத் தில்தான் அதன் கண்களில் அறிவின் சுடர் சிறிது பிரகாசிக்கும். ஊர்க்காரர்களுக்குக்கூட அசட்டுத்தனம் என்று படும்படி தகப்பனார் நடந்துகொண்டார். அவ ருடைய அசட்டுத்தனத்தின் சிகரம் என்னவென்றால், பிள்ளையை உள்ளூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதுதான். 'ஒத்தைக்கொரு பிள்ளை என்றால் புத்திகூடக் கட்டையாப் போகுமா?" ஊர்க்காரர்கள் கூடச் சிரித்தார்கள். என்று பள்ளிக்கூட வாத்தியாருக்கு அதிகமாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அவர் படிப்பு, ஊர்க்காரர்களைப் பிரமிக்க வைப்பதற்குப் போதுமானது. மேலும் அநுபவம் நிறைந்தவர். பையனுக்குப் படிப்பு வராது என்று சொல்ல வில்லை. நளினமாக சமஸ்கிருதக் கதை ஒன்றைச் சொல்லி, மாடு மேய்த்தல் அறிவு விருத்தியாவதற்கு முதற்படி என்று சொல்லி வைத்தார். தலைமைக்காரத் தேவர் மகனுக்கா மாட்டுக்காரப் பிள்ளைகளின் துணை கிடைக்காமற் போகும்? ஜாம் ஜாம் என்று எருமை சவாரி செய்துகொண்டு அவன் குறுமலைப்