உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

மனித யந்திரம் 157 புறத்தில், ஒருவரும் இல்லாத தனி வண்டியில் ஏறி, கூட்ஸ் ஷெட் பக்கம் பார்த்த ஜன்னல் அண்டையில் உட் கார்ந்தார். ஜன்னல் பக்கம் இருந்த நிம்மதி, இவரது மனத்தைத் துருதுரு என்று வாட்டியது. எழுந்து பிளாட் பாரத்தின் பக்கத்திலிருக்கும் ஜன்னல் பக்கம் வந்து உட் கார்ந்து கொண்டு, வண்டி எப்பொழுது புறப்படும் என் பதை ஆவலாக அறிய எஞ்சின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். பிள்ளைவாள்! ஏது இந்த ராத்திரியில்!" என்றது கம்பீரமான ஒரு குரல். வேறு ஒருவரும் இல்லை. ரயில்வே போலீஸைச் சேர்ந்த அவரது நண்பர் கலியாண சுந்தரம். பிள்ளை திடுக்கிட்டுத் திரும்பினார். போலீஸ்காரன்! பிள்ளையவர்கள் நண்பரைப் பார்க்க வில்லை; காக்கி உடையைத்தான் பார்த்தார்! தன்னை யறியாமல் அவரது வாய், "தூத்துக்குடி வரை!" என்றது. "என்ன அவசரம்! நான் உங்களை மணியாச்சியில் பார்க்கிறேன்!" என்று சொல்லி, அளவெடுத்து வைக்கும் பெருமிதமான நடையுடன், லக்கேஜ்வான் பக்கம் நிற்கும் ஸ்டேஷன் மாஸ்டரை நாடினார் கலியாணசுந்தரம் பிள்ளை. Ł மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு நுனி நாக்கு முதல் அடித் தொண்டைவரை ஒரே வறட்சி; கண்கள் சுழன்றன. "கலர்! சோடா" என்று நீட்டினான் ஸோடாக்காரன். 'ஏ, ஸோடா! கலர் ஒன்று உடை!" என்றார் பிள்ளை. 'டஸ்}' என்ற சப்தம்; 'ஸார்' என்று நீட்டினான் சோடாக்காரன். வாங்கிக் குடித்தார். "பூப்!" என்று ஏப்பமிட்டுக்கொண்டே, ஓரணாவை அவன் கையில் கொடுத்துவிட்டுப் பலகையில் சாய்ந்து கண்ணை மூடினார் பிள்ளை. 'கலியாணி பார்த்துவிட்டானே! நாளைக்கு நம் குட்டு வெளிப்பட்டுப் போகுமே!” துறைமுகத்தில் கலியாண சுந்தரம் பிள்ளை தமக் காகக் காத்துக் கொண்டிருப்பதை மனக் கண்ணால் பார்த்தார்.